வாடா செல்லம்.. உனக்கு தான் வெயிட்டிங்.. 200எம்பி கேமரா.. இந்தியாவுக்கு வரும் புது Vivo போன்.. எந்த மாடல்?
விவோ (vivo) நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் விவோ எக்ஸ்200 (vivo X200) மற்றும் விவோ எக்ஸ்200 ப்ரோ (vivo X200 Pro) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் விவோ எக்ஸ்200 ப்ரோ மினி (Vivo X200 Pro mini) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது விவோ நிறுவனம். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது கடந்த ஆண்டு சீனாவில் விவோ எக்ஸ்200 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த போன் இந்திய மற்றும் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்படவில்லை. தற்போது ஆன்லைனில் இந்த விவோ எக்ஸ்200 ப்ரோ மினி போன் ஆனது வரும் ஏப்ரல் (April 2025) மாதம் அறிமுகமாகும் எனத் தகவல் கசிந்துள்ளது. ஆனாலும் விவோ நிறுவனம் இந்த போனின் அறிமுகம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. மேலும் இப்போது விவோ எக்ஸ்200 ப்ரோ மினி போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

விவோ எக்ஸ்200 ப்ரோ மினி அம்சங்கள் (Vivo X200 Pro mini Specifications): 6.31-இன்ச் 1.5கே ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதி கொண்டுள்ளது இந்த புதிய விவோ எக்ஸ்200 ப்ரோ மினி போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,440 x 3,200பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பிரைட்னஸ் வசதி உள்ளது.
தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 9400 சிப்செட் (Dimensity 9400 chipset) வசதி இந்த விவோ போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ், கேமிங் ஆப்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஆப் வசதிகளை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த டைமன்சிட்டி சிப்செட்.
50எம்பி சோனி எல்ஒய்டி-818 மெயின் சென்சார் (Sony LYT-818 main sensor) + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200எம்பி டெலிபோட்டோ கேமரா என ட்ரிபிள் ரியர் கேமர செட்டப் இந்த விவோ ஸ்மார்ட்போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.
16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த புதிய விவோ போன் விற்பனைக்கு வரும். அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) ஆதரவு கொண்டுள்ளது விவோ எக்ஸ்200 ப்ரோ மினி ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் ஆடியோ பகுதிக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

5700mAh பேட்டரி விவோ எக்ஸ்200 ப்ரோ மினி போனில் இடம்பெற்றுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
OriginOS 5 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் விவோ ஸ்மார்ட்போனில் உள்ளன. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications