அதிர போகுது மார்க்கெட்.. 200எம்பி கேமரா.. OLED டிஸ்பிளே.. வருகிறது புதிய Vivo மினி போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் விரைவில் விவோ எக்ஸ்200 ப்ரோ மினி (Vivo X200 Pro mini) போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும். அதன்பின்பு அனைத்து நாடுகளிலும் இந்த போன் அறிமுகமாகும். இந்நிலையில் விவோ எக்ஸ்200 ப்ரோ மினி போனின் படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது.
அதன்படி விவோ எக்ஸ்200 ப்ரோ மினி ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ எக்ஸ்200 ப்ரோ மினி அம்சங்கள் (Vivo X200 Pro mini Specifications): 6.3-இன்ச் 1.5கே ஒஎல்இடி(OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய விவோ எக்ஸ்200 ப்ரோ மினி போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,440 x 3,200பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9400 சிப்செட் (Dimensity 9400 chipset) உடன் இந்த புதிய விவோ போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ், கேமிங் ஆப்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஆப் வசதிகளை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த டைமன்சிட்டி சிப்செட்.
50எம்பி சோனி எல்ஒய்டி-818 மெயின் சென்சார் (Sony LYT-818 main sensor) + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200எம்பி டெலிபோட்டோ கேமரா என ட்ரிபிள் ரியர் கேமர அமைப்புடன் விவோ எக்ஸ்200 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் கொண்டு இந்த போன் வெளிவரும்.
16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த புதிய விவோ போன் வெளிவரும். அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) ஆதரவுடன் விவோ எக்ஸ்200 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த போனின் ஆடியோ பகுதிக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
5500mAh பேட்டரி உடன் விவோ எக்ஸ்200 ப்ரோ மினி அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

OriginOS 5 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன்விவோ எக்ஸ்200 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன்.
குறிப்பாக விவோ எக்ஸ்200 ப்ரோ மினி ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இருக்கும். குறிப்பாக அனைத்து நாடுகளிலும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய விவோ போன்.
photo credit: weibo.com, moneycontrol, gizmochina


Click it and Unblock the Notifications








