Home
Mobile

புதுசு வருது.. பழசுக்கு ரூ.5,500 தள்ளுபடி.. 5800mAh பேட்டரி.. 90W பாஸ்ட் சார்ஜிங்.. OIS கேமரா.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் விவோ எக்ஸ்200டி (Vivo X200t) ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது. இந்த வெளியீட்டுக்கு முன்னதாக ஏற்கனவே வெளியான விவோ எக்ஸ்200 (Vivo X200) ஸ்மார்ட்போனுக்கு ரூ.5,500 தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 3என்எம் (Octa Core Dimensity 9400 3nm) சிப்செட் கொண்ட இந்த மாடலின் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. கேமரா, சிப்செட், பேட்டரி போன்ற பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. அதேபோல விலை விவரங்களும் கசிந்துவிட்டன. இந்த நேரத்தில் விவோ எக்ஸ்200 ஸ்மார்ட்போனுக்கு ரூ.5,500 தள்ளுபடி கிடைக்கிறது.

புதுசு வருது.. பழசுக்கு ரூ.5,500 தள்ளுபடி.. 5800mAh பேட்டரி.. மாடல்?

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் மார்க்கெட் விலை ரூ.65,999 ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.5,500 தள்ளுபடியில் வாங்க கிடைக்கிறது. இந்த தள்ளுபடியானது ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.60,499 பட்ஜெட்டில் இந்த ஸ்மார்ட் போனை வாங்கிக் கொள்ளலாம்.

விவோ எக்ஸ்300 அம்சங்கள் (Vivo X200 Specifications): 6.67 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுக்கிறது. இதில் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட், 4500 லோக்கல் பீக் பிரைட்னஸ் (Local Peak Brightness) மற்றும் பி3 வைடு கலர் காமட் (Wide Color Gamut) கிடைக்கிறது. மேலும், 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆட்டோ போகஸ் அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலி போட்டோ கேமரா கொண்ட ட்ரிபிள் ரியர் சிஸ்டம் கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் விசிஎஸ் (VCS) கிடைக்கிறது. மேலும், சோனி ஐம்எக்ஸ்921 (Sony IMX921) சென்சாரும் கிடைக்கிறது.

ஜேஎன்1 (JN1) சென்சார் அல்ட்ரா வைடு கேமராவில் கிடைக்கிறது. சோனி‌ ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் டெலிபோட்டோ கேமராவில் கிடைக்கிறது. இந்த டெலிபோட்டோ கேமராவிலும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. 3எக்ஸ்‌ ஆப்டிகல் ஜூமிங் (3x Optical Zoom) கொடுக்கப்பட்டுள்ளது.

4K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கிறது. சூப்பர் மூன் (Supermoon), ஆஸ்ட்ரோ (Astro), லேண்ட்ஸ்கேப் மோட் (Landscape Mode), ப்ரோ (Pro), லைவ் போட்டோ (Live Photo), போர்ட்ராய்டு வீடியோ (Portrait Video), நைட் மோட் (Night Mode), சூப்பர் மேக்ரோ (Super Macro), ஜீஸ் மல்டிபோகல் போர்ட்ராய்டு (ZEISS Multifocal Portrait) பீச்சர்கள் கிடைக்கின்றன.

வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளுக்காக 32 எம்பி ஃப்ரெண்ட் கேமரா கிடைக்கிறது. இதிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். 5800 mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. நேச்சுரல் கிரீன் (Natural Green), காஸ்மோஸ் பிளாக் (Cosmos Black) ஆகிய கலர்களில் இந்த ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போனின் விலை ரூ.59,999 பட்ஜெட்டில் இருக்க வாய்ப்புள்ளது. இந்த எக்ஸ்200டி ஸ்மார்ட்போனை பொறுத்தவரையில், அதே 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. ஜீஸ் ஆப்டிக்ஸ் கொடுத்துள்ளது. ஜீஸ் மாஸ்டர் கலர் டிஸ்பிளே கொண்டுள்ளது.

மேலும், ஓர்ஜின்ஓஎஸ் கிடைக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 9400+ சிப்செட்டை கொடுத்துள்ளது. 6200mAh பேட்டரியை கொடுத்துள்ளது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 40W ஃபிளாஷ் சார்ஜிங் கிடைக்கிறது. பைபாஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஐபி68 மற்றும் ஐபி69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X200 Gets Rs 5500 Discount in Amazon Ahead of Vivo X200t India Launch Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X