நாங்க கேட்டது Mini.. ஆனா கிடைச்சதோ FE.. இந்திய சந்தையில் புதிய Vivo போன்.. என்ன மாடல்? என்ன விலை?
திடீரென "மினி ஸ்மார்ட்போன்" (Mini Smartphone) கான்செப்ட் எங்கிருந்து கிளம்பியது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் ஒன்பிளஸ் மற்றும் விவோ ஆகிய இரண்டும் இதை சீரீஸ் ஆக எடுத்துக்கொண்டன என்பது மட்டும் உறுதி. இரண்டுமே மினி ஸ்மார்ட்போன்களில் (அதாவது ஒப்பீட்டளவில் சிறிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன்களில்) பணியாற்றியன.
ஆரம்பத்தில் ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) ஆனது ஒன்பிளஸ் 13 மினி (OnePlus 13 Mini) என்கிற பெயரின் கீழ் தான் அறிமுகமாகும் என்று கூறப்பட்டது. ஆனால் பாரம்பரியத்தை பின்பற்றும் வண்ணம் இது ஒன்பிளஸ் 13டி ஆகவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் விவோ நிறுவனமோ "மினி" என்கிற வார்த்தையை கைவிடாமல்.. விவோ எக்ஸ்200 ப்ரோ மினி (Vivo X200 Pro Mini) என்கிற பெயரிலேயே சீனாவில் அறிமுகமானது.

இதே சீரிஸின் கீழ் சீனாவில் அறிமுகமான விவோ எக்ஸ்200 (Vivo X200) மற்றும் விவோ எக்ஸ்200 ப்ரோ (Vivo X200 Pro) மாடல்கள் இந்தியாவிலும் அறிமுகம் ஆனதால், விவோ எக்ஸ்200 ப்ரோ மினி மாடலும் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது இந்திய சந்தைக்கு வராது என்றும், இதற்கு பதிலாக விவோ எக்ஸ்200 எப்இ (Vivo X200 FE) என்கிற மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
விவோ எக்ஸ்200 எப்இ எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் (Vivo X200 FE India Launch)? விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஸ்மார்ட்பிரிக்ஸ் தெரிவித்துள்ளது. விவோ எக்ஸ்200 அல்ட்ரா (Vivo X200 Ultra) மாடலுடன் அறிமுகப்படுத்தப்படும் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்ட விவோ எக்ஸ்200 ப்ரோ மினிக்கு பதிலாக விவோ எக்ஸ்200 எப்இ அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் (Vivo X200 FE Specifications Expected)?
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.31-இன்ச் 1.5K LTPO OLED டிஸ்பிளே
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் + 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 90W பாஸ்ட் சார்ஜிங்
விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம் (Vivo X200 FE Price in India Expected)? இது டைமன்சிட்டி 9400இ சிப்செட் (Dimensity 9400e SoC) மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது இன்னும் அறிவிக்கப்படாத சிப்செட் ஆகும். இது டைமன்சிட்டி 9400 சிப்செட்டின் பின்டு டவுன் வெர்ஷன் ஆக இருக்கலாம்.
நினைவூட்டும் வண்ணம் சீனாவில் அறிமுகமான விவோ எக்ஸ்200 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 9400 சிப்செட்டை கொண்டுள்ளது. சீனாவில் இந்த ஸ்மார்ட்போனின் 12ஜிபி + ரேம் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன், இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.56,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆக இது எப்படியும் ரூ.50,000 க்கும் குறைவான பட்ஜெட்டில் தான் அறிமுகம் செய்யப்படும். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இந்தியாவில் அறிமுகமாகவும் விவோ எக்ஸ்200 எப்இ மாடல் ஆனது, சீனாவில் விவோ எஸ்30 ப்ரோ மினி (Vivo S30 Pro Mini) என்கிற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், இது மீடியாடெக் டைமன்சிட்டி 9400இ உடன் வரும் என்றும் கூறப்படுகிறது. ஆகமொத்தம் விவோ நிறுவனம் இந்திய சந்தையில் "மினி" என்கிற பெயரில் என்ற ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்ய விரும்பவில்லை என்பது போல் தெரிகிறது.


Click it and Unblock the Notifications








