சத்தமில்லாமல் சம்பவம் செய்த Vivo.. 6500mAh பேட்டரி.. ஐபி69 ரேட்டிங்.. புது 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ எக்ஸ்200 எப்இ (Vivo X200 FE) ஸ்மார்ட்போனை இன்று தைவானில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இதே விவோ ஸ்மார்ட்போன் வரும் ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த புதிய விவோ போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
விவோ எக்ஸ்200 எப்இ அம்சங்கள் (Vivo X200 FE specifications): 6.31-இன்ச் அமோலெட் (AMOLED)டிஸ்பிளே வசதியுடன் விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2640 x 1216 பிக்சல்ஸ், 1.5கே ரெசல்யூஷன்(resolution) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9300 பிளஸ் எஸ்ஒசி (MediaTek Dimensity 9300+ SoC) சிப்செட் உடன் இந்த புதிய விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 ஒஎஸ் (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
இந்த போனில் ZEISS கேமரா செட்டப் உள்ளது. அதன்படி 50எம்பி சோனி ஐஎஸ்எக்ஸ்921 மெயின் கேமரா + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த அசத்தலான விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த விவோ ஸ்மார்ட்போனில் உள்ளது.
அதேபோல் இந்த விவோ ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த புதிய போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவும் இந்த போனில் உள்ளன. பின்பு இந்த போனின் எடை 186 கிராம் ஆகும்.
12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவும் கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன். மேலும் மாடர்ன் ப்ளூ (Modern Blue), லைட் ஹனி யெல்லோ (Light Honey Yellow), ஃபேஷன் பிங்க் (Fashion Pink) மினிமலிஸ்ட் பிளாக் (Minimalist Black) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
6500mAh பேட்டரி வசதியுடன் இந்த புதிய விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, வைஃபை 7, புளூடூத் 5.4, புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன
தற்போது விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் தைவானில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த போனின் விற்பனை தேதி மற்றும் விலைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. கூடிய விரைவில் இந்த புதிய விவோ போனின் விலை குறித்த தகவல்கள் வெளியாகும்.


Click it and Unblock the Notifications








