Home
Mobile

யாரு சாமி அவன்.. ரூ.6,000 ஆஃபர் போக 6500mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. 50MP கேமரா.. 16GB ரேம்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 6500mAh பேட்டரி மட்டுமல்லாமல், 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா, அமோலெட் டிஸ்பிளே மற்றும் 16 ஜிபி ரேம் கொண்ட மாடலாக விவோ எக்ஸ்200 எப்இ (Vivo X200 FE) வெளியாகி இருக்கிறது. இதுபோக டெலிபோட்டோ கேமரா, ஜீஸ் ஆப்டிக்ஸ், டைமன்சிட்டி 9300+ சிப்செட் போன்ற மற்ற பீச்சர்களிலும் மிரளவிடுகிறது. இந்த விவோ போனின் முழு பீச்சர்கள், விலை மற்றம் விற்பனை தேதி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

விவோ எக்ஸ்200 எப்இ அம்சங்கள் (Vivo X200 FE Specifications): இந்த விவோ போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் டைமன்சிட்டி 9300+ 4என்எம் (Octa Core Dimensity 9300+ 4nm) சிப்செட் கிடைக்கிறது. ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) மற்றும் இம்மார்டலிஸ் ஜி720 ஜிபியு (Immortalis G720 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

யாரு சாமி அவன்.. ரூ.6,000 ஆஃபர் போக 6500mAh பேட்டரி.. 90W சார்ஜிங்!

6.31 இன்ச் (2640 x 1216 பிக்சல்கள்) எல்டிபிஓ அமோலெட் (LTPO AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த மினி டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4320Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. பிரீமியம் அவுட்டோர் அவுட்புட் கொடுக்கும்படி 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 2 வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன.

12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்க இருக்கிறது. இந்த விவோ எக்ஸ்200 எப்இ போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்921 (Sony IMX921) சென்சாரும், ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜியும் மெயின் கேமராவில் வருகிறது.

யாரு சாமி அவன்.. ரூ.6,000 ஆஃபர் போக 6500mAh பேட்டரி.. 90W சார்ஜிங்!

அதேபோல சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் மற்றும் 3X ஜூமிங் டெலிபோட்டோவில் கிடைக்கிறது. இதுவொரு ஜீஸ் ஆப்டிக்ஸ் (ZEISS Optics), ஆரா லைட் (Aura Light) கொண்ட மாடலாகும். ஆகவே, நைட் போட்டோகிராபி மற்றும் போர்ட்ராய்டு போட்டோகிராபி பிரீமியமாக எதிர்பார்க்கலாம். 50 எம்பி செல்பீ ஷூட்டர் கேமராவை கொடுக்கிறது.

மினி டிசைனிலும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6500mAh பேட்டரி கொடுக்கிறது. இந்த பேட்டரியுடன் 7.99 எம்எம் தடிமன் மற்றும் 186 கிராம் எடை மட்டுமே கிடைக்கிறது. பிரீமியம் மாடலுக்கு நிகராக IP68 ரேட்டிங் மட்டுமல்லாமல், IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர் (Stereo Speakers) உள்ளது.

சிப்செட்டுக்கு ஏற்ப கிடைக்கும் பேண்ட்களுடன் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கிடைக்கிறது. மேலும், வை-பை (Wi-Fi 7), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) சப்போர்ட் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.54,999ஆகவும், 16 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.59,999ஆகவும் இருக்கிறது.

இந்த விவோ எக்ஸ்200 எப்இ போனை லக்ஸ் கிரே, ப்ரோஸ்ட் ப்ளூ மற்றும் ஆம்பர் எல்லோ கலர்களில் வாங்கி கொள்ளலாம். ஜூலை 23ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart), விவோ இந்தியா (Vivo India) தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ரூ.6,000 பேங்க் டிஸ்கவுண்ட், ரூ.6,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X200 FE With 50MP Camera Launched in India Sale From July 23 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X