மிட்-ரேஞ்ச் மிரளுது.. 6500mAh பேட்டரி.. ZEISS கேமரா.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த விவோ பிரியர்களும் அறக்க பறக்கும்படி விவோ எக்ஸ்200 எப்இ (Vivo X200 FE) போனின் வெளியீடு உறுதியாகி இருக்கிறது. 7.99 எம்எம் தடிமனில் 6500mAh பேட்டரியுடன், காம்பாக்ட் டிசைன் மாடலை விரும்பும் பிரியர்களை தட்டித்தூக்கும்படி கிடைக்க இருக்கிறது. இதுபோக ஜீஸ் கேமரா சிஸ்டம், 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி டெலிபோட்டோ, டைமன்சிட்டி 9300பிளஸ் சிப்செட் போன்ற பீச்சர்களில் மிரளவிடுகிறது. இந்த விவோ எக்ஸ்200 எப்இ போனின் முழு விவரங்கள் இதோ.
காம்பாக்ட் டிசைனை விரும்பும் ஸ்மார்ட்போன்களை பிரியர்களிடையே விவோ எஸ்30 ப்ரோ மினி (Vivo S30 Pro Mini) மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், சீன மார்கெட்டில் வெளியானதால், மற்ற மார்கெட்டின் வெளியீட்டுக்கு விவோ பிரியர்கள் காத்திருந்தனர். இதையடுத்து குளோபல் மார்கெட்டில் விவோ எக்ஸ்200 எப்இ மாடலாக இது வெளியாக இருப்பதும் உறுதியானது.

இந்த நேரத்தில் விவோ இந்தியா நிறுவனமானது, கேமரா, பேட்டரி, டிசைன் மற்றும் சிப்செட் போன்ற முக்கிய பீச்சர்களுடன் இந்திய வெளியீட்டை உறுதி செய்துள்ளது. இந்த போன் விரைவில் வெளியாகும் என்று விவோ இந்தியா வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட முழு பீச்சர்களும் வெளியாகிவிட்டதால், ஓரிரு நாட்கள் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது.
விவோ எக்ஸ்200 எப்இ அம்சங்கள் (Vivo X200 FE Specifications): இந்த விவோ போனானது 6.31 இன்ச் (2640 x 1216 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே கொடுக்கிறது. 7.99 தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் பாடி வருகிறது. இவ்வளவு ஸ்லிம் பாடியிலும் 6500mAh பேட்டரி கொடுக்கிறது. இந்த பேட்டரிக்கு 90W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் வெறும் 10 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால், 3 மணி நேரங்களுக்கு வீடியோ ஸ்ட்ரீமிங் கிடைக்கும். அதேபோல, ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் 25.44 மணி நேரங்களுக்கு யூடியூப் பிளேபக் மற்றும் 9.5 மணி நேரங்களுக்கு கேமிங் பேக்கப் கொடுக்கிறது. லோவ்-டெம்ப்ரேச்சர் ரெசிஸ்டன்ட், சிலிகான் அனோட் டெக்னாஜி சப்போர்ட் கிடைக்கிறது.

இந்த விவோ எக்ஸ்200 எப்இ போனுக்கு IP68 ரேட்டிங் & IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆகவே, ஃபுல் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் எதிர்பார்க்காலம். 12 மணி நேரங்களுக்கு மழையில் தாக்குப்பிடிக்கும். 80 டிகிரி செல்சியஸ் ஹை-டெம்ப்ரேச்சர் கிடைக்கிறது. பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி சிப்செட் பேக் செய்துள்ளது.
ஆகவே, மீடியாடெக் டைமன்சிட்டி 9300பிளஸ் 4என்எம் (MediaTek Dimensity 9300+ 4nm) சிப்செட் கிடைக்கிறது. லேட்டஸ்ட் ஏஐ பீச்சர்கள் மற்றும் யுஐ பீச்சர்களுடன் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கிடைக்கிறது. 50 எம்பி ஜீஸ் மெயின் கேமரா + 50 எம்பி ஜீஸ் டெலிபோட்டோ கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா (Triple Rear Camera) கிடைக்கிறது.
இந்த கேமராவில் ஜீஸ் மல்டிபோகல் போர்ட்ராய்டு (ZEISS Multifocal Portrait), ஜீஸ் ஸ்டைல் பொக்கெ (ZEISS Style Bokeh), ஸ்ட்ரீட் போட்டோகிராபி மோட் (Street Photography Mode) போன்ற பிரத்யேக கேமரா பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், வின்டேஜ் ஃபிலிம் இமேஜிங் ஸ்டைல்ஸ் (Vintage Film Imaging Styles) கிடைக்கிறது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாகும். ரூ.40,000 இருக்கலாம்.


Click it and Unblock the Notifications