Home
Mobile

பிளிப்கார்ட் காலி.. ரூ.5,500 டிஸ்கவுண்ட்.. 6500mAh பேட்டரி.. SONY கேமரா.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் விவோ எக்ஸ்200 எப்இ (Vivo X200 FE) போனின் விற்பனையானது ரூ.5,500 தள்ளுபடி போக தொடங்கி இருக்கிறது. 6.31 இன்ச் டிஸ்பிளே கொண்ட பாடியில் 6500mAh பேட்டரி கொடுத்து இந்திய பிரியர்களை அடுத்து பிடித்து ஆர்டர் போட வைத்திருக்கிறது. 90W சார்ஜிங், சோனி கேமரா போன்ற மற்ற பீச்சர்களும் தரமாக இருக்கின்றன. இந்த விவோ எக்ஸ்200 எப்இ போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜூலை 14ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியான இந்த விவோ போனின் விற்பனை இன்று தொடங்கி இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) மட்டுமல்லாமல், அமேசான் (Amazon) மற்றும் விவோ இந்தியா ஆகிய தளங்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. ரூ.5,500 அறிமுக சலுகை கொடுக்கப்படுகிறது. இது குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு மட்டுமே இது கிடைக்கிறது.

பிளிப்கார்ட் காலி.. ரூ.5,500 டிஸ்கவுண்ட்.. 6500mAh பேட்டரி.. மாடல்?

விவோ எக்ஸ்200 எப்இ விலை (Vivo X200 FE Price): 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.54,999ஆக இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் வேரியண்ட்டின் விலை ரூ.59,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.5,500 உடனடி டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்து கொள்ளலாம்.

ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.49,499 விலைக்கு வாங்க கிடைக்கிறது. காம்பாக்ட் டிசைனில் 186 கிராம் எடை மட்டுமே வருகிறது. அதேபோல 7.99 எம்எம் தடிமன் மட்டுமே கொடுக்கிறது. லக்ஸ் கிரே (Luxe Grey), ப்ரோஸ்ட் ப்ளூ (Frost Blue) மற்றும் ஆம்பர் எல்லோ (Amber Yellow) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் காலி.. ரூ.5,500 டிஸ்கவுண்ட்.. 6500mAh பேட்டரி.. மாடல்?

பிரீமியம் போட்டோகிராபி அவுட்புட் கொடுக்க ஜீஸ் ஆப்டிக்ஸ் (ZEISS Optics) கேமரா மற்றும் நைட்போட்டோகிராபி கொடுக்க ஆரா லைட் (Aura Light) இடம்பெற்றுள்ளது. ஆம்பர் எல்லோ கலர் வேரியண்ட்டில் மிடில் ஃபிரேம் பிளாக் கலர் கொடுக்கிறது. ஆகவே, இதில் மட்டும் டூயல் டோன் பாடி எதிர்பார்க்கலாம். இப்போது, மற்ற பீச்சர்களுக்கு வருவோம்.

விவோ எக்ஸ்200 எப்இ அம்சங்கள் (Vivo X200 FE Specifications): 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.31 இன்ச் (2640 x 1216 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 4320Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் P3 கலர் காமட் கிடைக்கிறது.

மிட்-ரேஞ்ச் மாடலாக இருப்பதால், தரமான பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9300+ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 9300+ 4nm) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) மற்றும் சிப்செட்டுக்கு ஏற்ப இம்மார்டலிஸ் ஜி720 ஜிபியு (Immortalis G720 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்துள்ளது.

சோனி ஐஎம்எக்ஸ்921 (Sony IMX921) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா உள்ளது. 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. பெரிய 6500mAh பேட்டரி மற்றும் அதற்கு 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுத்து இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X200 FE With 12GB RAM Available For Purchase At Rs 5500 Discount Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X