பின்றானே இவன்.. SONY கேமரா.. 6500mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. 90W சார்ஜிங்.. எந்த மாடல்?
காம்பாக்ட் டிசைன் ஸ்மார்ட்போன்களை விரும்பும் கஸ்டமர்களுக்கு ஏற்றபடி 6.31 இன்ச் டிஸ்பிளேவுடன் 6500mAh பேட்டரி கொண்ட மாடலாக விவோ எக்ஸ்200 எப்இ (Vivo X200 FE) குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. இந்திய மார்கெட்டில் இந்த போன் வெளியாகும் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருப்பதால், இப்போது பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை யூகிக்க முடிகிறது. இந்த குளோபல் வேரியண்ட்டின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
விவோ எக்ஸ்200 எப்இ அம்சங்கள் (Vivo X200 FE Specifications): இந்த விவோ போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) மற்றும் ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9300பிளஸ் (Octa-Core 4nm MediaTek Dimensity 9300+) சிப்செட் கிடைக்கிறது. இது பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் சிப்செட் மாடலாகும்.

இதற்கு ஏற்ப இம்மார்டலிஸ் ஜி720 ஜிபியு (Immortalis G720 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த விவோ எக்ஸ்200 எப்இ போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஒரேவொரு வேரியண்ட் மட்டுமே வெளியாகி இருக்கிறது. இந்திய வெர்ஷனில் கூடுதல் ரேம் மற்றும் மெமரி வேரியண்ட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. 6.31 இன்ச் (2640 x 1216 பிக்சல்கள்) டிஸ்பிளே உள்ளது.
இந்த அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4320Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைப்பதால், அவுட்டோர் டிஸ்பிளே அவுட்புட் பிரீமியமாக எதிர்பார்க்கலாம். 6.31 இன்ச் டிஸ்பிளே மட்டுமே வருவதால், காம்பாக்ட் பிரியர்களுக்கு பக்காவான ஹேண்டி பீல் கொடுக்கும்.

இவ்வளவு காம்பாக்ட்டிலும் 6500mAh பேட்டரி கொடுத்துள்ளது. ஆகவே, பேக்கப் பட்டையை கிளப்பும்படி எதிர்பார்க்கலாம். இதுபோக 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைப்பதால், நொடிகளில் சார்ஜ் செய்து கொள்ளும்படியும் இருக்கிறது. 6500mAh பேட்டரி போன்கள் பெரும்பாலும் 200 கிராம் இருக்கும், ஆனால் இது 186 கிராம் எடை மட்டுமே வருகிறது. 7.99 எம்எம் தடிமன் கொடுக்கிறது.
இந்த விவோ எக்ஸ்200 எப்இ போனில் சோனி ஐஎம்எக்ஸ்921 (Sony IMX921) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கிடைக்கிறது. இதுபோக 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவும், சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவும் கிடைக்கிறது.
50 எம்பி செல்பீ ஷூட்டர் கேமரா கிடைக்கிறது. இதுவொரு ஜீஸ் ஆப்டிக்ஸ் கேமரா மாடலாகும். ஆகவே, அதற்கு ஏற்ப பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த விவோ எக்ஸ்200 எப்இ போனில் போனில் ஹை-ரெஸ் ஆடியே (Hi-Res Audio) கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. ஆன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் டைப்-சி ஆடியோ சப்போர்ட் கிடைக்கிறது.
பிரீமியம் லுக்கில் பிளாக் லக்ஸ் (Black Luxe), எல்லோ குளோவ் (Yellow Glow), பிங்க் வைப் (Pink Vibe) மற்றும் ப்ளூ பிரீஸ் (Blue Breeze) ஆகிய கலர்கள் கிடைக்கிறது. மலேசிய மார்கெட்டில் முதலில் கிடைக்க இருக்கிறது. அங்கு 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.64,790ஆக (மலேஷியன் ரிங்கிட் படி) இருக்கிறது. இந்தியாவில் இதே விலைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications