ஜூலை.14-க்கு அப்புறம் இதுதான்.. 6500mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. SONY கேமரா.. பிளிப்கார்ட், Amazon சேல் உறுதி!
இந்திய மார்கெட்டில் இருக்கும் விவோ பிரியர்கள் ஒட்டுமொத்த பேரும் வரும் ஜூலை 14ஆம் தேதிக்கு காத்திருக்கின்றனர். விவோ எக்ஸ்200 எப்இ (Vivo X200 FE) மற்றும் விவோ எக்ஸ் ஃபோல்டு 5 (Vivo X Fold 5) ஆகிய மாடல்கள் அந்த தேதியில் வெளியாக இருக்கின்றன. இப்போது, அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) தளங்களில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது. முக்கிய பீச்சர்களும் அதில் உறுதியாகி இருக்கின்றன. இதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த விவோ எக்ஸ்200 எப்இ மற்றும் விவோ எக்ஸ் ஃபோல்டு 5 ஆகிய மாடல்கள் ஏற்கனவே சீன மார்கெட்டில் வெளியாகி இருப்பதால், பீச்சர்கள் மற்றும் விலையை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இந்திய வெர்ஷன்களில் மாறுதல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், மைக்ரோசைட்களில் உறுதி செய்யப்பட்ட பீச்சர்கள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.

விவோ எக்ஸ்200 எப்இ அம்ங்கள் (Vivo X200 FE Specifications): இந்த விவோ போனில் 6.31 இன்ச் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 9300 பிளஸ் (MediaTek Dimensity 9300 Plus) சிப்செட் கிடைக்க இருக்கிறது. டூயல் டோன் டிசைனில் ஆம்பர் எல்லோ (Amber Yellow), ஃப்ரோஸ்ட் ப்ளூ (Frost Blue) மற்றும் லக்ஸ் கிரே (Luxe Grey) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.
IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஜீஸ் ஆப்டிக்ஸ் மற்றும் ஜீஸ் பொக்கெ ஸ்டைல் சப்போர்ட் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா கிடைக்கிறது. ஆகவே, (Sony IMX921) சென்சார் மற்றும் விசிஎஸ் பயோனிக் (VCS Bionic) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இதில் ஓஐஎஸ் டெக்னாலஜி சப்போர்ட் கிடைக்கிறது.
சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் மற்றும் அல்ட்ரா லார்ஜ் சென்சார் கொண்ட 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இதுபோக 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது. இந்த இந்த விவோ எக்ஸ்200 எப்இ போனில் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், பெரிய 6500mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. ஃபோல்டு மாடலின் பீச்சர்கள் எப்படி?

விவோ எக்ஸ் ஃபோல்டு 5 அம்சங்கள் (Vivo X Fold 5 Specifications): இந்த ஃபோல்டு போனில் 6000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இதுபோக 40W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஏஐ ஸ்மார்ட் ஆபீஸ் சப்போர்ட் கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி டெலிபோட்டோ கேமரா பேக் செய்துள்ளது.
50 எம்பி விசிஎஸ் பயோனிக் மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்921 சென்சார் மற்றும் 23எம்எம் போகல் லென்த் கிடைக்கிறது. இதுபோக ஓஐஎஸ் டெக்னாலஜி மற்றும் விசிஎஸ் 2.0 டெக்னாலஜி கிடைக்கிறது. மேலும், 15 எம்எம் போகல் லென்த் மற்றும் ஆட்டோ போகஸ் சப்போர்ட் கொண்ட 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது.
இந்த மாடல்களின் விலை விரங்களை பொறுத்தவரையில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்றாலும், சீன மார்கெட்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் அடிப்படையில் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே, விவோ எக்ஸ்200 எப்இ மாடலின் விலை ரூ.54,999 பட்ஜெட்டில் தொடங்க வாய்ப்புள்ளது. விவோ எக்ஸ் ஃபோல்டு 5 போனின் விலை ரூ.1,39,999ஆக இருக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications