Home
Mobile

சாரே கொல மாஸ்.. வருகிறது ஸ்டைலான Vivo போன்.. 6500mAh பேட்டரி.. சோனி கேமரா.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் அடுத்த மாதம் இந்தியாவில் ஸ்டைலான விவோ எக்ஸ்200 எப்இ (Vivo X200 FE) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த விவோ போனின் விற்பனை தேதி மற்றும் விலை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

அதாவது எக்ஸ் தளத்தில் டிப்ஸ்டர் சஞ்சு சவுத்ரி வெளியிட்ட தகவலின்படி, இந்த விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் ஜூலை 17, 2025 அன்று விற்பனைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் இந்தியாவில் ரூ.49,999-க்கு குறைவான விலையில் இந்த புதிய விவோ போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

சாரே கொல மாஸ்.. வருகிறது ஸ்டைலான Vivo போன்.. எந்த மாடல்?

விவோ எக்ஸ்200 எப்இ அம்சங்கள் (Vivo X200 FE specifications): சக்திவாய்ந்த டைமன்சிட்டி 9400இ (Dimensity 9400e) சிப்செட் உடன் புதிய விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் மேம்பட்ட கேமிங் வசதிகள் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக 6.1-இன்ச் எல்டிபிஒ ஒஎல்இடி (LTPO OLED) டிஸ்பிளே வசதியுடன் விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1.5கே ரெசல்யூஷன் (resolution) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி Sony IMX921 மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி சோனி Sony IMX882 டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேம்பட்ட ஏஐ அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50ம்பி செல்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது.

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய விவோ எக்ஸ்200 எப்இ போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் 6500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 15 (FuntouchOS 15) மூலம் இயங்கும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த விவோ போன் அறிமுகம் செய்யப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X200 FE price and sale date leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X