வா ராசா.. உனக்கு தான் வெயிட்டிங்.. 50எம்பி கேமரா.. 512ஜிபி மெமரி.. புது Vivo 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?
விவோ எக்ஸ்200 எப்இ (Vivo X200 FE) ஸ்மார்ட்போன் இந்தியாவின் BIS சான்றிதழ் காணப்பட்டது. இந்நிலையில் இந்த புதிய விவோ போனின் அறிமுக தேதியும் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதன்படி வரும் 2025 ஜூலை 10-ம் தேதி இந்த விவோ எக்ஸ்200 எப்இ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த போனின் அறிமுக தேதியை இன்னும் விவோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இப்போது ஆன்லைனில் வெளியான விவோ எக்ஸ்200 எப்இ போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
விவோ எக்ஸ்200 எப்இ அம்சங்கள் (Vivo X200 FE specifications): 6.1-இன்ச் எல்டிபிஒ ஒஎல்இடி (LTPO OLED) டிஸ்பிளே வசதியுடன் விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1.5கே ரெசல்யூஷன் (resolution) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

தரமான டைமன்சிட்டி 9400இ (Dimensity 9400e) சிப்செட் உடன் இந்த புதிய விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அனைத்து ஆப்களையும் இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.
அதேபோல் Zeiss கேமராக்களுடன் இந்த புதிய விவோ போன் வெளிவரும். அதுவும் இந்த போனில் OIS ஆதரவு கொண்ட 50எம்பி Sony IMX921 மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50ம்பி சோனி Sony IMX882 டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50ம்பி செல்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது.
குறிப்பாக 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய விவோ எக்ஸ்200 எப்இ போன் அறிமுகமாகும்.
இந்த விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 15 (FuntouchOS 15) மூலம் இயங்கும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த விவோ போன் அறிமுகம் செய்யப்படும்.
6500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications