Home
Mobile

ஜூலை 14 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 50எம்பி கேமரா.. இந்தியாவுக்கு வரும் புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ எக்ஸ்200 எப்இ (Vivo X200 FE) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக தேதி ஆன்லைனில் வெளியாகி உள்ளது. குறிப்பாக 6500mAh பேட்டரி, 90W சார்ஜிங், 50எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும். இப்போது ஆன்லைனில் வெளியான இந்த புதிய விவோ போனின் அறிமுக தேதி மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது PassionateGeekz.com வெளியிட்ட தகவலின்படி, விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது ஜூலை 14 ஆம் தேதி மதியம் 12 மணி அளவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போன் ஏற்கனவே உலக சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 14  வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது புதிய விவோ போன்..

மாடர்ன் ப்ளூ (Modern Blue), லைட் ஹனி யெல்லோ (Light Honey Yellow), ஃபேஷன் பிங்க் (Fashion Pink) மினிமலிஸ்ட் பிளாக் (Minimalist Black) நிறங்களில் இந்த போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

விவோ எக்ஸ்200 எப்இ அம்சங்கள் (Vivo X200 FE specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 9300 பிளஸ் எஸ்ஒசி (MediaTek Dimensity 9300+ SoC) சிப்செட் கொண்டுள்ளது இந்த புதிய விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன். இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 ஒஎஸ் (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவும் கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன்.

6.31-இன்ச் அமோலெட் (AMOLED)டிஸ்பிளே வசதியுடன் விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1 20 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2640 x 1216 பிக்சல்ஸ், 1.5கே ரெசல்யூஷன்(resolution) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது

விவோ எக்ஸ்200 எப்இ போனில் ZEISS கேமரா செட்டப் உள்ளது. அதன்படி 50எம்பி சோனி ஐஎஸ்எக்ஸ்921 மெயின் கேமரா + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு கொண்டுள்ளது இந்த விவோ போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த விவோ போனில் உள்ளது.

இந்த விவோ ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த புதிய போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

ஜூலை 14  வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது புதிய விவோ போன்..

குறிப்பாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி கொண்டுள்ளது விவோ எக்ஸ்200 எப்இ. மேலும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவும் இந்த போனில் உள்ளன. பின்பு இந்த போனின் எடை 186 கிராம் ஆகும்.

அதேபோல் 6500mAh பேட்டரியை கொண்டுள்ளது இந்த புதிய விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, வைஃபை 7, புளூடூத் 5.4, புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக விவோ எக்ஸ்200 எப்இ போன் இந்தியாவில் ரூ.40,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X200 FE India launch date leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X