இந்தியாவில் Vivo X200 மற்றும் Vivo X200 Pro.. 200MP கேமராவுடன் வந்துட்டேன்னு சொல்லு.. அடேங்கப்பா மாஸ்..
விவோ (Vivo) நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் சாதனமான விவோ எக்ஸ்200 சீரிஸ் (Vivo X200 Series) ஸ்மார்ட்போன் சாதனங்களை சீன சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இப்போது இந்த புதிய சீரிஸ் ஸ்மார்ட்போன் சாதனத்தின் அறிமுகத்தை இந்திய சந்தைக்குள் விவோ நிறுவனம் கொண்டுவரவுள்ளதை புதிய டீஸர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த புதிய விவோ எக்ஸ்200 சீரிஸ் வரிசையில் நிறுவனம் விவோ எக்ஸ்200 (Vivo X200) மற்றும் விவோ எக்ஸ்200 ப்ரோ (Vivo X200 Pro) ஆகிய இரண்டு மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யுமென்று உறுதியாகியுள்ளது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ நிறுவனம் அதன் புதிய விவோ எக்ஸ்200 (Vivo X200) மற்றும் விவோ எக்ஸ்200 ப்ரோ (Vivo X200 Pro) ஸ்மார்ட்போன் மாடல்களை வரும் டிசம்பர் மாதம் வெளியிடும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. இந்த புதிய போன்களின் வருகையை குறிக்கும் விதமாக, நிறுவனம் இப்போது vivo X200 தொடர் குறித்த புதிய டீஸர்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் Vivo X200 மற்றும் Vivo X200 Pro.. 200MP கேமராவுடன் மாஸ் என்ட்ரி:
இந்த மாதத்தின் துவக்கத்தில், விவோ எக்ஸ்200 (Vivo X200) மற்றும் விவோ எக்ஸ்200 ப்ரோ (Vivo X200 Pro) ஸ்மார்ட்போன் சாதனங்கள் மலேசியன் குளோபல் சந்தையில் இந்த போன்களை விவோ அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதனை வெளியிட விவோ இப்போது தயாராகி வருகிறது. இந்த தொடரின் ஸ்பெஷலிட்டி என்றால், அது Vivo X200 Pro போனில் இருந்து வருகிறது.
இந்த போனில், நிறுவனம் புதுமையான 200MP ZEISS APO டெலிபோட்டோ கேமராவைக் (telephoto camera) கொண்டுள்ளது. இது இந்தியாவின் முதல் 200MP டெலிபோட்டோ கேமரா கொண்ட போன் என்ற சிறப்பு பெயரை பெறுகிறது. மேலும், vivo இந்த மாடலில் இந்தியாவின் முதல் 6000mAh செமி-சாலிட் ஸ்டேட் பேட்டரியை (6000mAh semi-solid state battery) அறிமுகப்படுத்தப் போவதாக உறுதியளிக்கிறது.
Vivo X200 மற்றும் Vivo X200 Pro போனின் ஸ்டோரேஜ், நிறம் மற்றும் விற்பனை விபரம்:
அதேசமயத்தில் இந்த போனில் நிறுவனம் V3+ கேமரா சிப் அம்சத்தை ஆதரிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. விவோ X200 தொடர் அதன் குளோபல் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட அதே மாடலின் அதே சிறப்பம்சம் மற்றும் விவரக்குறிப்புகளைத் தக்கவைக்கும். இரண்டு மாடல்களும் Cosmos Black நிறத்தில் கிடைக்கும், மேலும் X200 Pro Titanium Grey நிறத்திலும், X200 Natural Green நிறத்திலும் கிடைக்கும்.
இந்த சாதனம் 16GB + 512GB ஸ்டோரேஜ் மாடலுடன் நாம் எதிர்பார்க்கலாம். விவோ X200-க்கான மலிவான வேரியண்ட் ஆக 12GB + 256GB வகை வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த பல்வேறு வகையான விருப்பங்கள், வெவ்வேறு பயனர் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்றவாறு vivo X200 தொடர் போன் கிடைப்பதை உறுதி செய்கிறது. பிளிப்கார்ட் (Flipkart), vivo இந்தியாவின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் vivo கடைகள் மூலமாக மத்திய டிசம்பரில் இருந்து போன்கள் விற்பனை செய்யப்படும்.
இதன் மூலம் இந்தியா முழுவதும் பரவலான வாடிக்கையாளர்களுக்கு தங்கள் புதிய தொழில்நுட்பத்தை கிடைக்கச் செய்வதில் vivo உறுதியாக உள்ளது என்பதை இந்த கிடைக்கும் தன்மை காட்டுகிறது. வெளியீட்டு தேதி நெருங்கி வருவதால், விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் ஆரம்பகால சிறப்பு சலுகையை சரியாக பயன்படுத்து குறைந்த விலையில் இந்த போன்களை வாங்கலாம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








