Home
Mobile

ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமான புதிய Vivo போன்கள்.. என்ன விலை? எப்போது விற்பனை?

ஏற்கனவே உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ எக்ஸ்200 (vivo X200) மற்றும் விவோ எக்ஸ்200 ப்ரோ (vivo X200 Pro) ஸ்மார்ட்போன்கள் ஒரு வழியாக இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தரமான சிப்செட் மற்றும் அட்டகாசமான கேமராக்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும். இப்போது விவோ எக்ஸ்200 மற்றும் விவோ எக்ஸ்200 ப்ரோ போன்களின் விலை, அம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்களைப் பார்க்கலாம்.

விவோ எக்ஸ்200 ப்ரோ அம்சங்கள் (Vivo X200 Pro Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9400 சிப்செட் (Dimensity 9400 SoC) கொண்டுள்ளது விவோ எக்ஸ்200 ப்ரோ போன். குறிப்பாக இமோர்ட்டாலிஸ் G925 GPU (Immortalis-G925 GPU) ஆதரவு இந்த போனில் உள்ளது.

ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமான புதிய விவோ போன்கள்.. என்ன விலை?

6.78-இன்ச் LTPO AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது விவோ எக்ஸ்200 ப்ரோ. மேலும் 120Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate), 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (nits peak brightness) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக Funtouch OS 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும்.

50எம்பி மெயின் கேமரா (50MP Sony LYT-818) + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா (Samsung JN1) + 200எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமர அமைப்புடன் விவோ எக்ஸ்200 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா வசதி இதில் உள்ளது. IP69+IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த போன்.

6000mAh பேட்டரி, 90W வயர்டு சார்ஜிங், 30W வயர்லெஸ் சார்ஜிங், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, வைஃபை (Wi-Fi 7 802.11 be), ப்ளூடூத் (Bluetooth 5.4), ஜிபிஎஸ் (GPS), க்ளோனஸ் (GLONASS), கலிலியோ (Galileo)உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த விவோ எக்ஸ்200 ப்ரோ போனில் உள்ளன.

விவோ எக்ஸ்200 அம்சங்கள் (Vivo X200 Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9400 சிப்செட் (Dimensity 9400 SoC) கொண்டுள்ளது விவோ எக்ஸ்200 போன். குறிப்பாக அதேபோல் இமோர்ட்டாலிஸ் G925 GPU (Immortalis-G925 GPU) ஆதரவு இந்த போனில் உள்ளது.

6.67-இன்ச் LTPS AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது விவோ எக்ஸ்200. மேலும் 120Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate), 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (nits peak brightness) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக Funtouch OS 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும்.

50எம்பி மெயின் கேமரா (50MP Sony LYT-818) + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா (Samsung JN1) + 50எம்பி டெலிபோட்டோ கேமரா (Sony IMX882) என்கிற ட்ரிபிள் ரியர் கேமர அமைப்புடன் விவோ எக்ஸ்200 போன் வெளிவந்துள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா வசதி இதில் உள்ளது. IP69+IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த போன்.

5800mAh பேட்டரி, 90W வயர்டு சார்ஜிங், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, வைஃபை (Wi-Fi 7 802.11 be), ப்ளூடூத் (Bluetooth 5.4), ஜிபிஎஸ் (GPS), க்ளோனஸ் (GLONASS), கலிலியோ (Galileo)உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த விவோ எக்ஸ்200 போனில் உள்ளன.

ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமான புதிய விவோ போன்கள்.. என்ன விலை?

விலை மற்றும் விற்பனை

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்20 ஸ்மார்ட்போனின் விலை ரூ.65,999-ஆக உள்ளது. பின்பு இதன் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்டவேரியண்ட் ரூ.71,999-ஆக உள்ளது. நேநேச்சுரல் கிரீன் (Natural Green) மற்றும் காஸ்மோஸ் பிளாக் (Cosmos Black) நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கிறது.

16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்200 ப்ரோ போனின் விலை ரூ.94,999-ஆக உள்ளது. டைட்டானியம் சில்வர் (Titanium Silver), காஸ்மோஸ் பிளாக் நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும். அதேபோல் டிசம்பர் 19-ம் தேதி முதல் இந்த இரண்டு போன்களும் அமேசான், பிளிப்கார்ட், விவோ இந்தியா இஸ்டோர் தளங்களில் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
vivo X200 and X200 Pro launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X