நவம்பர் 19 உறுதி.. 200எம்பி கேமரா.. 90W சார்ஜிங்.. களமிறங்கும் புதிய Vivo போன்கள்.. எந்த மாடல்?
சீனாவில் கடந்த மாதம் விவோ எக்ஸ்200 (Vivo X200) மற்றும் விவோ எக்ஸ்200 ப்ரோ (Vivo X200 Pro) ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த புது விவோ போன்கள் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதாவது நவம்பர் 19-ம் தேதி உலக சந்தையில் விவோ எக்ஸ்200 (Vivo X200) மற்றும் விவோ எக்ஸ்200 ப்ரோ (Vivo X200 Pro) ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் மலேசியாவில் இந்த போன்கள் நவம்பர் 19ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் இந்தியாவில் அடுத்த மாதம் இந்த இரண்டு விவோ போன்கள் வெளிவரும் கூறப்படுகிறது. மேலும் இப்போது விவோ எக்ஸ்200 (Vivo X200) மற்றும் விவோ எக்ஸ்200 ப்ரோ (Vivo X200 Pro) போன்களின் அம்சங்களைப் பார்க்கலாம்.

விவோ எக்ஸ்200 ப்ரோ அம்சங்கள் (Vivo X200 Pro Specifications): விவோ எக்ஸ்200 ப்ரோ ஆனது 6.78-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate), 4500 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (nits peak brightness) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. குறிப்பாக ஆண்ட்ராய்டு 15 உடன் ஒரிஜின் ஓஎஸ் 5 (OriginOS 5 based on Android 15)மூலம் இந்த போன் இயங்குகிறது.
சக்திவாய்ந்த ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9400 சிப்செட் (Dimensity 9400 SoC) கொண்டுள்ளது விவோ எக்ஸ்200 ப்ரோ போன். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இமோர்ட்டாலிஸ் G925 GPU ஆதரவு இந்த போனில் உள்ளது. மேலும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி கொண்டுள்ளது இந்த விவோ போன்.
விவோ எக்ஸ்200 ப்ரோ போன் 50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமர அமைப்புடன் வெளிவரும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா வசதி இதில் உள்ளது. IP69+IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
அதேபோல 6000mAh பேட்டரி, 90W சார்ஜிங், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, வைஃபை (Wi-Fi 7 802.11 be), ப்ளூடூத் (Bluetooth 5.4), ஜிபிஎஸ் (GPS), க்ளோனஸ் (GLONASS), கலிலியோ (Galileo)உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த விவோ எக்ஸ்200 ப்ரோ போனில் உள்ளன. மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

விவோ எக்ஸ்200 அம்சங்கள் (Vivo X200 Specifications): 6.67-இன்ச் 1.5கே ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 15, ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9400 சிப்செட் (Dimensity 9400 SoC), 16ஜிபி ரேம், 1டிபி மெமரி, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமர செட்டப் , 5800mAh பேட்டரி, 90W சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த விவோ எக்ஸ்200 போன் வெளிவரும்.
குறிப்பாக விவோ எக்ஸ்200 (Vivo X200) மற்றும் விவோ எக்ஸ்200 ப்ரோ (Vivo X200 Pro) ஸ்மார்ட்போன்கள் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.


Click it and Unblock the Notifications