அடுத்த மாதம் உறுதி.. 200MP கேமரா.. 90W சார்ஜிங்.. இந்தியாவுக்கு வரும் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் சீனாவில் விவோ எக்ஸ்200 (Vivo X200) மற்றும் விவோ எக்ஸ்200 ப்ரோ (Vivo X200 Pro) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த இரண்டு விவோ போன்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது அடுத்த மாதம் அதாவது டிசம்பர் மாதம் துவக்கத்தில் இந்த போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த இரண்டு போன்களும் தரமான அம்சங்கள் மற்றும் தனித்துவமான கேமரா வசதியைக் கொண்டுள்ளன. எனவே இந்தியாவில் விவோ எக்ஸ்200 மற்றும் விவோ எக்ஸ்200 ப்ரோ போன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். மேலும் இந்த விவோ போன்களின் சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ எக்ஸ்200 அம்சங்கள் (Vivo X200 Specifications): 6.67-இன்ச் 1.5கே ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது விவோ எக்ஸ்200 போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate), 4500 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (nits peak brightness) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. குறிப்பாக ஆண்ட்ராய்டு 15 உடன் ஒரிஜின் ஓஎஸ் 5 (OriginOS 5 based on Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது.
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9400 சிப்செட் (Dimensity 9400 SoC)கொண்டுள்ளது இந்த விவோ எக்ஸ்200 போன். அதேபோல் இமோர்ட்டாலிஸ் G925 GPU தரவு கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போன் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும். 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி கொண்டுள்ளது இந்த விவோ போன்.
50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமர செட்டப் கொண்டு வெளிவரும் விவோ எக்ஸ்200 போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா வசதி இதில் உள்ளது. IP69+IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த போன்.
5800mAh பேட்டரி, 90W சார்ஜிங், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, வைஃபை (Wi-Fi 7 802.11 be), ப்ளூடூத் (Bluetooth 5.4), ஜிபிஎஸ் (GPS), க்ளோனஸ் (GLONASS), கலிலியோ (Galileo) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த விவோ எக்ஸ்200 போனில் உள்ளன.
விவோ எக்ஸ்200 ப்ரோ அம்சங்கள் (Vivo X200 Pro Specifications): 6.78-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது விவோ எக்ஸ்200 ப்ரோ போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate), 4500 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (nits peak brightness) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. குறிப்பாக ஆண்ட்ராய்டு 15 உடன் ஒரிஜின் ஓஎஸ் 5 (OriginOS 5 based on Android 15)மூலம் இந்த போன் இயங்குகிறது.
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9400 சிப்செட் (Dimensity 9400 SoC) கொண்டுள்ளது விவோ எக்ஸ்200 ப்ரோ போன். அதேபோல் இமோர்ட்டாலிஸ் G925 GPU ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். மேலும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி கொண்டுள்ள இந்த விவோ போன்.

50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமர செட்டப் கொண்டு வெளிவரும் விவோ எக்ஸ்200 ப்ரோ போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா வசதி இதில் உள்ளது. IP69+IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த போன்.
6000mAh பேட்டரி, 90W சார்ஜிங், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, வைஃபை (Wi-Fi 7 802.11 be), ப்ளூடூத் (Bluetooth 5.4), ஜிபிஎஸ் (GPS), க்ளோனஸ் (GLONASS), கலிலியோ (Galileo)உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த விவோ எக்ஸ்200 ப்ரோ போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications