அறிமுகம் : விவோ எக்ஸ்0 மற்றும் எக்ஸ்20 பிளஸ் (விலை & அம்சங்கள்).!

|

பல வதந்திகள் மற்றும் கசிவுகளுக்கு பின்னர், விவோ எக்ஸ்0 மற்றும் எக்ஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போன் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுளளன. சீனாவில் நடந்த நிகழ்வொன்றில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் தொடங்கப்பட்டுள்ளன.

அறிமுகம் : விவோ எக்ஸ்0 மற்றும் எக்ஸ்20 பிளஸ் (விலை & அம்சங்கள்).!

முன் வெளியான டீசரின் படி, இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 85.3% மற்றும் 86.11% உயர் ரெசல்யூஷன் ஸ்க்ரீன் டூ பாடி விகிதத்தைக் கொண்டிருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன்கள் பின்புறத்தில் ஒரு இரட்டை கேமரா அமைப்பும் மற்றும் பின்புறம்-ஏற்றப்பட்ட கைரேகை சென்சார் ஒன்றும் உள்ளது.

0.1 வினாடிகளில்..

0.1 வினாடிகளில்..

இக்கருவிகளின் செல்பீ கேமராவுடன் இணைக்கப்பட்டுள்ள பேஸ் வேக் அம்சமானது, ஆப்பிள் ஐபோன் எக்ஸ்-சில் இடம்பெற்றுள்ள பேஸ் ஐடி போலவே செயல்படும். 0.1 வினாடிகளில் தொலைபேசியைத் திறக்க உதவும் இந்த அம்சம் சுமார் 128 முக அம்சங்களைக் கண்டறியும் திறன் கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

விவோ எக்ஸ்20 அம்சங்கள்

விவோ எக்ஸ்20 அம்சங்கள்

2160 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18: 9 விகிதம் கொண்ட 6.01-அங்குல முழுஎச்டி+ சூப்பர் அமோஎல்இடி 2.5டி வளைந்த கண்ணாடி டிஸ்பிளே கொண்டுள்ள இந்த சாதஹனம் அட்ரெனோ 512 ஜிபியூ, 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி / 128ஜிபி என்ற சேமிப்பு திறன் கொண்ட ஒரு ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

12எம்பி + 15எம்பி இரட்டை கேமரா

12எம்பி + 15எம்பி இரட்டை கேமரா

மைக்ரோ எஸ்டி அட்டை மூலம் 256 ஜிபி வரை சேமிப்பு இடத்தை விரிவாக்கும் ஆதரவு கொண்டுள்ள விவோ எக்ஸ்20 ஸ்மார்ட்போனின் இமேஜிங் துறையை பொறுத்தமட்டில், எப்/1.8 துளை மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 12எம்பி + 15எம்பி இரட்டை கேமரா அமைப்பை பின்புறம் கொண்டிருக்கும். முன்பக்கம், எப்/ 2.0 துளை மற்றும் மென்மையான எல்இடி பிளாஷ் கொண்ட 12எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

பாஸ்ட் சார்ஜ்

பாஸ்ட் சார்ஜ்

விவோ எக்ஸ்20 சாதனத்தின் இணைப்பு அம்சங்களை பொறுத்தமட்டில், 4ஜி வோல்ட், ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் இரட்டை சிம் ஆதரவு ஆகியவைகள் அடங்கும். இதன் 3245எம்ஏஎச் பேட்டரியானது பாஸ்ட் சார்ஜ் செய்யும் திறன் கொண்டது.

விவோ எக்ஸ்20 பிளஸ் அம்சங்கள்

விவோ எக்ஸ்20 பிளஸ் அம்சங்கள்

2160 x 1080 பிக்சல் தீர்மானம் கொண்ட 6.43 அங்குல முழுஎச்டி+ சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே (18: 9 விகிதம்) கொண்டுள்ள இக்கருவியின் செயலி, ரேம் மற்றும் சேமிப்பு மற்றும் கேமரா துறைகள் விவோ எக்ஸ்20 போன்றே இருக்கின்றன. பன்டச்ஓஎஸ் (FuntouchOS) 3.2 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது. இதன் 3905எம்ஏஎச் பேட்டரியானது பாஸ்ட் சார்ஜ் செய்யும் திறன் கொண்டது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

தங்கம், ரோஸ் தங்கம், மற்றும் மேட் பிளாக் ஆகிய நிற மாறுபாடுகள் விவோ எக்ஸ்20 மற்றும் எக்ஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியாகின்றன. விவோ எக்ஸ்20 சாதனத்தின் 64ஜிபி மாறுபாடானது சுமார் ரூ.29,500/- என்றும் மற்றும் சாதனத்தின் 128ஜிபி மாறுபாடானது சுமார் ரூ.33,500/- என்ற விலை நிர்ணயத்தையும் பெறலாம். மறுகையில் உள்ள விவோ எக்ஸ்20 பிளஸ் ஆனது 64ஜிபி சேமிப்பு மாதிரியில் மட்டுமே வருகிறது. அது சுமார் ரூ34,500/- என்ற விலை நிர்ணயத்தை பெறலாம்.

உலகளாவிய கிடைக்கும்தன்மை

உலகளாவிய கிடைக்கும்தன்மை

சீனாவில் முன்பதிவு திறந்துவிடப்பட்டுள்ள விவோ எக்ஸ்20 மற்றும் விவோ எக்ஸ்20 பிளஸ் ஆகிய இரண்டு கருவிகளுமே செப்டம்பர் 30-ஆம் தேதியன்று விற்பனைக்கு வருகிறது. இப்போது வரையிலாக, ​​இந்த சாதனங்களின் உலகளாவிய கிடைக்கும்தன்மை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை.

Best Mobiles in India

English summary
Vivo X20, X20 Plus with FHD+ display and dual rear cameras unveiled. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X