விவோ எக்ஸ்20 : 24எம்பி செல்பீ மற்றும் டூயல் ரியர் கேம், வேறென்ன வேணும்.?
இந்த நிகழ்வின் போது நிறுவனம் அதன் விவோ எக்ஸ்20 ப்ளஸ் ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் அதன் எக்ஸ்20 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதின் மூலம் விவோ நிறுவனம் அதன் எக்ஸ்-தொடர் ஸ்மார்ட்போனாகளை தொடங்குவதற்க்கான அனைத்து பணிகளையும் அமைத்தாகிவிட்டது போல தெரிகிறது. செப்டம்பர் 21-ஆம் தேதிக்கு சீனாவில் நடைபெறஉள்ள நிகழ்வொன்றிற்கான ஊடக அழைப்புகளை விவோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த அழைப்பிதழ் எதிர்பார்க்கப்படும் சாதனத்தின் முன்னணி பேனலைக் காட்சிப்படுத்துகிறது. அதன் மேல் மற்றும் கீழ் பலகத்தின் பக்கங்களிலும் குறைந்த அளவிலான பெஸல்களே தென்படுகின்றன.

குறைந்த அளவிலான பெஸல்
அந்த அழைப்பிதழ் எதிர்பார்க்கப்படும் சாதனத்தின் முன்னணி பேனலைக் காட்சிப்படுத்துகிறது. அதன் மேல் மற்றும் கீழ் பலகத்தின் பக்கங்களிலும் குறைந்த அளவிலான பெஸல்களே தென்படுகின்றன.

இரட்டை கேமரா அமைப்பு
விவோ எக்ஸ்20 ஸ்மார்ட்போன் ஆனது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ வி7 ப்ளஸ் ஸ்மார்ட்போனை ஒத்திருக்கிறது. ஆனால் வி+ போலல்லாமல், எக்ஸ்20 கருவியின் பின்புல பலகத்தில் ஒரு இரட்டை கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது.

விவோ எக்ஸ்20 ப்ளஸ்
இந்த நிகழ்வின் போது நிறுவனம் அதன் விவோ எக்ஸ்20 ப்ளஸ் ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யலாமென எதிர்பார்க்கப்படுகிறது. சில முந்தைய வதந்திகளை மறுபரிசீலனை செய்வதின் மூலம், விவோ எக்ஸ்20 மற்றும் எக்ஸ்20 ப்ளஸ் ஆகிய இரண்டு கருவிகளும் டிஸ்பிளேவின் மேல் பக்கத்தில் உள்ள பெஸல் பகுதியில் செல்பீ கேமரா, இயர் பீஸ் மற்றும் பிற உணரிகள் இடம்பெறலாம்.

இரட்டை கேமரா அமைப்பு
விவோ நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போனும் இரட்டை கேமரா அமைப்பு கொண்டு வருகிறது. குறிப்பாக இந்த சாதனம் ஒன்ப்ளஸ் 5 , ஒப்போ ஆர்11 மற்றும் ஆப்பிள் ஐபோன் 7 ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களை நமக்கு நினைவூட்டுகிறது. இருப்பினும், இக்கருவியில் காணப்படும் ஒரே மற்றும் பெரிய வித்தியாசம் என்னெவெனில் - கைரேகை ஸ்கேனர் அம்சம் தான். பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் ஆனது பேனலில் அமைந்துள்ளது, இது மற்ற சாதனைகளிடம் இருந்து சிறிது பிரித்து பார்க்க வைக்கிறது.

24 மெகாபிக்சல் முதன்மை கேமரா
விவோ எக்ஸ்20 பற்றிய மற்றொரு போஸ்டரிலிருந்து சாதனம் சார்ந்த சில விவரங்களை பெற முடிகிறது. அந்த படத்தை பொறுத்தவரை, விவோ எக்ஸ்20 ஆனது ஒரு 24 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டு வரும். மற்றொரு லீக்ஸ் தகவலின் கீழ் விவோ எக்ஸ்20-ன் இரட்டை கேமரா அமைப்பும் முதன்மை கேமராவும் 24 மெகாபிக்சல் கொண்டிருக்கும் என்கிறது.

முழு எச்எச்டி ப்ளஸ் டிஸ்பிளே
இதர அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளை பொறுத்தமட்டில், விவோ எக்ஸ்20 ஆனது 1080x2160 பிக்சல் மற்றும் 18: 9 விகிதம் என்ற தீர்மானம் வழங்கும் ஒரு 5.8 அங்குல முழு எச்எச்டி ப்ளஸ் டிஸ்பிளே கொண்டு வருமென எதிர்பார்க்கபப்டுகிறது. மேலும் 6 ஜிபி ரேம் கொண்ட ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி உடன் இணைக்கப்பட்டு மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக மேலும் விரிவாக்கக்கூடிய ஆதரவுடன் 64ஜிபி உள் நினைவகத்தை இக்கருவி வழங்கும். 3500எம்ஏஎச் பேட்டரித்திறனுக்கும் மேல் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் இயக்கருவி ஆண்ட்ராய்டு நௌவ்கட் 7.1 கொண்டு (அவுட்-ஆப்-பாக்ஸில்) இயக்கப்படுகிறது.

விவோ எக்ஸ்20 ப்ளஸ்
விவோ எக்ஸ்20 ப்ளஸ் மாறுபாட்டை பொறுத்தமட்டில் கிட்டத்தட்ட எக்ஸ்20 வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் 24 மெகாபிக்சல் செல்பீ கேமராவுடன் சில குறிப்பிட்ட மேம்படுத்தல்கள் பெற்று வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications