Home
Mobile

24எம்பி செல்பீ மற்றும் ரியர் கேமராவுடன் 'மிரட்டலான' விவோ எக்ஸ் 20.!

தற்போது விபோ மூலம் வெளியிடப்பட்டுள்ள வீடியோவானது விவோ எக்ஸ்20 ஸ்மார்ட்போனின் முழுமையான செயல்பாட்டையும் வெளிப்படுத்துவதாய் உள்ளது

By Muthuraj

விவோ நிறுவனம் அதன் விவோ வி7 ப்ளஸ் சாதனத்தை அறிமுகப்படுத்திய ஒரு நாள் இடைவெளியில் அதன் அடுத்த ஸ்மார்ட்போன் பற்றிய அறிக்கைகள் வெளியான வண்ணம் உள்ளன. அதன்கீழ், விவோ நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக விவோ எக்ஸ்20 ஸ்மார்ட்போன் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

24எம்பி செல்பீ மற்றும் ரியர் கேமராவுடன் 'மிரட்டலான' விவோ எக்ஸ் 20.!

கடந்த இரண்டு மாதங்களில் விவோ எக்ஸ்20 ஸ்மார்ட்போன் பற்றிய பல கசிவுகளை ஆன்லைன் உலகம் சந்திருந்தாலும், தற்போது விபோ மூலம் வெளியிடப்பட்டுள்ள வீடியோவானது விவோ எக்ஸ்20 ஸ்மார்ட்போனின் முழுமையான செயல்பாட்டையும் வெளிப்படுத்துவதாய் உள்ளது. குறிப்பாக இதற்கு டிஇஎன்என்ஏ (TENNA) தளத்தில் காணப்பட்டதைப் போலவே தெரிகிறது.

இரு பக்கங்களிலும் குறைந்த பெஸல்கள்

இரு பக்கங்களிலும் குறைந்த பெஸல்கள்

வெளியான வீடியோவில் பார்ப்பது உண்மையெனில், விவோ எக்ஸ்20 ஸ்மார்ட்போன் ஆனது அதன் இரு பக்கங்களிலும் குறைந்த பெஸல்களோடு பெரிய அளவிலான டிஸ்பிளேவை கொண்டிருக்கும். மேல் மற்றும் கீழ் பெஸல்கள் சற்று தடித்த வண்ணம் உள்ளன.

செல்பீ கேமரா, இயர் பீஸ்

செல்பீ கேமரா, இயர் பீஸ்

டிஸ்பிளேவின் கீழ் பெஸல்களில் காண்பதற்கு ஒன்றுமில்லை, மறுகையில் டிஸ்பிளேவின் மேல் பக்கத்தில் உள்ள பெஸல் ஆனது செல்பீ கேமரா, இயர் பீஸ் மற்றும் பிற உணரிகளுக்கு இடமளிப்பது போல தோன்றுகிறது.

இரட்டை கேமரா அமைப்பு

இரட்டை கேமரா அமைப்பு

விவோ நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போனும் இரட்டை கேமரா அமைப்பு கொண்டு வருகிறது. குறிப்பாக இந்த சாதனம் ஒன்ப்ளஸ் 5 , ஒப்போ ஆர்11 மற்றும் ஆப்பிள் ஐபோன் 7 ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களை நமக்கு நினைவூட்டுகிறது.

பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்

பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்

இருப்பினும், இக்கருவியில் காணப்படும் ஒரே மற்றும் பெரிய வித்தியாசம் என்னெவெனில் - கைரேகை ஸ்கேனர் அம்சம் தான். பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் ஆனது பேனலில் அமைந்துள்ளது, இது மற்ற சாதனைகளிடம் இருந்து சிறிது பிரித்து பார்க்க வைக்கிறது.

24 மெகாபிக்சல் முதன்மை கேமரா

24 மெகாபிக்சல் முதன்மை கேமரா

விவோ எக்ஸ்20 பற்றிய மற்றொரு போஸ்டரிலிருந்து சாதனம் சார்ந்த சில விவரங்களை பெற முடிகிறது. அந்த படத்தை பொறுத்தவரை, விவோ எக்ஸ்20 ஆனது ஒரு 24 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டு வரும். மற்றொரு லீக்ஸ் தகவலின் கீழ் விவோ எக்ஸ்20-ன் இரட்டை கேமரா அமைப்பும் முதன்மை கேமராவும் 24 மெகாபிக்சல் கொண்டிருக்கும் என்கிறது.

முழு எச்எச்டி ப்ளஸ் டிஸ்பிளே

முழு எச்எச்டி ப்ளஸ் டிஸ்பிளே

இதர அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளை பொறுத்தமட்டில், விவோ எக்ஸ்20 ஆனது 1080x2160 பிக்சல் மற்றும் 18: 9 விகிதம் என்ற தீர்மானம் வழங்கும் ஒரு 5.8 அங்குல முழு எச்எச்டி ப்ளஸ் டிஸ்பிளே கொண்டு வருமென எதிர்பார்க்கபப்டுகிறது.

6 ஜிபி ரேம்

6 ஜிபி ரேம்

மேலும் 6 ஜிபி ரேம் கொண்ட ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி உடன் இணைக்கப்பட்டு மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக மேலும் விரிவாக்கக்கூடிய ஆதரவுடன் 64ஜிபி உள் நினைவகத்தை இக்கருவி வழங்கும். 3500எம்ஏஎச் பேட்டரித்திறனுக்கும் மேல் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் இயக்கருவி ஆண்ட்ராய்டு நௌவ்கட் 7.1 கொண்டு (அவுட்-ஆப்-பாக்ஸில்) இயக்கப்படுகிறது.

விவோ எக்ஸ்20 ப்ளஸ்

விவோ எக்ஸ்20 ப்ளஸ்

விவோ எக்ஸ்20 ஸ்மார்ட்போனின் 'ப்ளஸ்' மாறுபாடும், அதாவது விவோ எக்ஸ்20 ப்ளஸ் என்ற ஸ்மார்ட்போன் ஒன்றும் கிட்டத்தட்ட இதே வடிவமைப்பு அம்சங்கள் மற்றும் 24 மெகாபிக்சல் செல்பீ கேமராவுடன் சில குறிப்பிட்ட மேம்படுத்தல்கள் பெற்று வெளியாகுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது

Best Mobiles in India

English summary
Vivo X20 with 24-megapixel selfie camera spotted in a video. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X