விவோ எக்ஸ்20 பிளஸ் யுடி : விலை மற்றும் வெளியீட்டு தேதி அறிவிப்பு.!
இந்த விவோ எக்ஸ்20 ஸ்மார்ட்போனில் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
இன்ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் உடன் வெளிவரும் முதல் விவோ எக்ஸ்20 பிளஸ் யுடி ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஜனவரி 25 அன்று வெளியிட விவோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்பின்பு விவோ எக்ஸ்20 பிளஸ் யுடி ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, இன்ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் வசதி இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருப்பதால் அமோல்ட் ரக டிஸ்பிளேவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் ப்ரோடோடைப் சாதனத்தில் வழங்கப்பட்டுள்ள கைரேகை ஸ்கேனர் 0.6 முதல் 0.7 நொடிகளில் ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்யமுடியும்.

விவோ எக்ஸ்20 பிளஸ் யுடி ஸ்மார்ட்போன் பொதுவாக 6.43-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
விவோ எக்ஸ்20 பிளஸ் யுடி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
இந்த விவோ எக்ஸ்20 ஸ்மார்ட்போனில் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 12மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

விவோ எக்ஸ்20 பிளஸ் யுடி ஸ்மார்ட்போனில் 3900எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. கருப்பு, தங்கம், சாம்பெய்ன் தங்கம், ரோஜா தங்கம், மற்றும் மேட் பிளாக் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ எக்ஸ்20 பிளஸ் யுடி ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.36,659-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications