விவோ எக்ஸ்20 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
இக்கருவி 6.1-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின் (2160-1080)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவோ நிறுவனம் சீனாவில் எக்ஸ்20 ஸ்மார்ட்போனை கடந்த செப்டம்பர் 21-ம் தேதி அறிமுகப்படுத்தியது, இந்த ஸ்மார்ட்போன் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. அதன்பின் பிளாக் மார்ஸ் பதிப்பு மற்றும் பிளாக் அண்ட் கோல்ட் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
விவோ எக்ஸ்20 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை டிசம்பர் 8 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.34,127-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:
இக்கருவி 6.1-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின் (2160-1080)பிக்சல் தீர்மானம் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 2.5டி வளைந்த கண்ணாடி மூலம் இந்த ஸ்மார்ட்போன் பாதுகாக்கப்படுகிறது.

செல்பீ கேமரா:
இந்த விவோ எக்ஸ்20 ஸ்மார்ட்போனில் 24எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
இதனுடைய செல்பீ கேமரா 24மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 660:
விவோ எக்ஸ்20 பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்
ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு
இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3245எம்ஏஎச்:
விவோ எக்ஸ்20 ஸ்மார்ட்போனில் 3245எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications