மெர்சலான விவோ எக்ஸ்20 ஃபிபா வேர்ல்டு கப் எடிஷன் அறிமுகம்.!

Written By:

தற்சமயம் விவோ நிறுவனம் மெர்சலான விவோ எக்ஸ்20 ஃபிபா வேர்ல்டு கப் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் விவோ எக்ஸ்20 கிங் ஆஃப் குளோரி' பதிப்பு அறிவித்த பிறகு இப்போது புதிய எக்ஸ்20 ஃபிபா வேர்ல்டு கப் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.

2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா உலகக் கோப்பை உத்தியோகபூர்வ ஆதரவாளர்களாக அறிவித்துள்ளது விவோ நிறுவனம். இந்த சாதனம் மாஸ்கோவில்,  உலகக் கோப்பை போட்டியின் முன்னோடிக்கு முன்னதாகஇ ஒரு விழாவில் வெளிவந்தது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டிஸ்பிளே:

டிஸ்பிளே:

விவோ எக்ஸ்20 ஃபிபா வேர்ல்டு கப் எடிஷன் பொறுத்தவரை 6.01-இன்ச் முழு எச்டி பிளஸ் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9என்ற திரை விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 660:

ஸ்னாப்டிராகன் 660:

விவோ எக்ஸ்20 ஸ்மார்ட்போன் பொதுவாக குவாட்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660செயலியை கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

டூயல் கேமரா:

டூயல் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 24மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா மற்றும் 12மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 128ஜிபி மெமரி:

128ஜிபி மெமரி:

இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 கைரேகை சென்சார்

கைரேகை சென்சார்

இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார், டூயல்சிம், ப்ளூடூத், வைஃபை, ஜிபிஎஸ், ஒடிஜி, 3ஜி மற்றும் 4ஜி போன்ற பல இணைப்பு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

3245எம்ஏஎச்:

3245எம்ஏஎச்:

இந்த விவோ எக்ஸ்20 ஃபிபா வேர்ல்டு கப் எடிஷன் ஸ்மார்ட்போனில் 3245எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, மேலும் இவற்றின் எடை மதிப்பு 159.00 கிராம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Vivo X20 FIFA World Cup edition unveiled ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot