கருப்பு மற்றும் தங்க நிற மாறுபாடுகளில் வெளிவரும் விவோ எக்ஸ்20.!
விவோ எக்ஸ்20 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இப்போது கருப்பு மற்றும் தங்க நிற மாறுபாடுகளில் விவோ எக்ஸ்20 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
விவோ எக்ஸ்20 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இப்போது கருப்பு மற்றும் தங்க நிற மாறுபாடுகளில் விவோ எக்ஸ்20 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் பல மென்பொருள் தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த விவோ எக்ஸ்20 ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.33,500-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு கைரேகை சென்சார், டூயல் ரியர் கேமரா அமைப்பு போன்ற பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

டிஸ்பிளே:
விவோ எக்ஸ்20 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.01-இன்ச முழு எச்டி பிளஸ் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 18:9 காட்சி விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 660:
விவோ எக்ஸ்20 பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

செல்பீ கேமரா:
இந்த விவோ எக்ஸ்20 ஸ்மார்ட்போனில் 24எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 24மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3245எம்ஏஎச்:
விவோ எக்ஸ்20 ஸ்மார்ட்போனில் 3245எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications