அப்போ OnePlus 12 அவ்ளோ தானா? 120W சார்ஜிங், ZEISS பெரிஸ்கோப் கேமரா.. Vivo வச்ச வேட்டு.. என்ன மாடல்? என்ன விலை?
ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனிற்கு கட்டம் சரி இல்லை என்பது போல் தெரிகிறது. கடந்த டிசம்பர் 5 ஆம் தேதியன்று சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 12 வருகிற 2024 ஜனவரி 24 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஒன்பிளஸ் 12 க்கு போட்டியாக, இன்னும் சொல்லப்போனால் ஒன்பிளஸ் 12 போலவே அம்சங்களை கொண்ட ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G) ஸ்மார்ட்போன், வருகிற டிசம்பர் 12 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இதற்கிடையில் விவோ நிறுவனம் ஒன்பிளஸ் நிறுவனத்திற்கு தன் பங்கிற்கு ஒரு வேட்டு வைத்துள்ளது.

மொபைல் போட்டோகிராஃபி மற்றும் கேமரா போன் பிரியர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் விவோ எக்ஸ்100 சீரிஸின் (Vivo X100 Series) உலகளாவிய வெளியீட்டு தேதியை விவோ நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது. விவோ எக்ஸ்100 சீரிஸ் எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இதோ விவரங்கள்:
விவோ எக்ஸ்100 சீரீஸின் வெளியீட்டு தேதி: விவோ எக்ஸ்100 (Vivo X100) மற்றும் விவோ எக்ஸ் 100 ப்ரோ (Vivo X100 Pro) ஆகிய இரண்டும் வருகிற டிசம்பர் 14 ஆம் தேதியன்று உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிலும் அறிமுகமாகும்; ஆனால் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

நினைவூட்டும் வண்ணம் இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே கடந்த மாதமே (சரியாக சொல்ல வேண்டுமென்றால் நவம்பர் 13) சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன. எனவே விவோ எக்ஸ்100 மற்றும் விவோ எக்ஸ்100 ப்ரோ மாடல்களின் விலை நிர்ணயம் மற்றும் அம்சங்கள் குறித்து எந்த குழப்பமும் எங்களிடம் இல்லை.
விவோ எக்ஸ்100 ப்ரோ அம்சங்கள்: இது டூயல் சிம் ஆதரவு, ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான ஒரிஜின்ஓஎஸ் 4, 6.78-இன்ச் AMOLED 8T LTPO கர்வ்டு டிஸ்பிளே, ஆக்டா-கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 சிப்செட், 16GB வரை LPDDR5 ரேம் மற்றும் 1TB வரை UFS4.0 இன்பில்ட் ஸ்டோரேஜ் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

கேமராக்களை பொறுத்தவரை, Zeiss பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் Sony IMX989 1-இன்ச் சென்சார் + 50-மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா + 50-மெகாபிக்சல் Zeiss APO சூப்பர் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில், 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.
தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மதிப்பீட்டை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு உடனான 5,400mAh பேட்டரியை பேக் செய்கிறது. விவோ நிறுவனத்தின் கூற்றுப்படி, வெறும் 12.5 நிமிடங்களில் இது பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 50 சதவீதம் வரை நிரப்பும்.

விவோ எக்ஸ்100 அம்சங்கள்: விவோ எக்ஸ்100 ப்ரோ மாடலில் உள்ள அதே டூயல் சிம் அதரவு, சாஃப்ட்வேர் மற்றும் டிஸ்பிளேவை கொண்டுள்ள விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போன் ஆனது 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 16GB வரையிலான LPDDR5 RAM மற்றும் 1TB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜையும் வழங்குகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, இது Zeiss-பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்புடன் வருகிறது. இதில் OIS உடன் 50-மெகாபிக்சல் Sony IMX920 VCS பயோனிக் மெயின் கேமரா + 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + 100x தெளிவான ஜூமிங்கை வழங்கும் 64-மெகாபிக்சல் Zeiss சூப்பர்-டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில், இது 32 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் உள்ளது.
தூசி மற்றும் தண்ணீரிலிருந்து பாதுகாப்பதற்கான ஐபி68 மதிப்பீட்டை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது, நிறுவனத்தின் கூற்றுப்படி இது வெறும் 11 நிமிடங்களில் 50 சதவிகிதம் வரை பேட்டரியை நிரப்பும். மேலும் இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 14.8 நாட்கள் காத்திருப்பு நேரத்தையும் வழங்கும்.
விவோ எக்ஸ்100 சீரிஸ் சீன விலை நிர்ணயம்: விவோ எக்ஸ்100 ப்ரோவின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ருபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.56,500 க்கும், 16ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் சுமார் ரூ.60,000 க்கும், 16ஜிபி ரேம் + 512ஜிபி மற்றும் 16ஜிபி ரேம் + 1டிபி ஆப்ஷன்கள் முறையே ரூ.62,000 க்கும், ரூ.68,000 க்கும் அறிமுகம் செய்யப்பட்டன.
மறுகையில் உள்ள வெண்ணிலா வேரியண்ட் ஆன விவோ எக்ஸ்100 மாடலும் கூட மொத்தம் 4 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டது. விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டரோஜ் ஆப்ஷனின் விலை ரூ.50,000 முதல் தொடங்கி ஹை-எண்ட் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.58,000 வரை செல்கிறது இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே பிளாக், ப்ளூ, ஆரஞ்சு மற்றும் ஒயிட் கலர்களில் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








