Home
Mobile

மார்க்கெட் அதிருது.. 120W சார்ஜிங்.. 50MP கேமரா.. நவ.13-ல் வருகிறது புதிய விவோ போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போனை வரும் நவம்பர் 13-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் உடன் விவோ எக்ஸ்100 ப்ரோ மற்றும் விவோ எக்ஸ்100 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சீனாவில் இந்த போன்கள் அறிமுகமானதும் இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஆன்லைனில் கசிந்த விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

50MP கேமரா.. நவ.13-ல் வருகிறது புதிய விவோ போன்.. எந்த மாடல்?

அதாவது சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9320 (MediaTek Dimensity 9300) சிப்செட் வசதியுடன் இந்த விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் கேமிங் மற்றும் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

50எம்பி ஐஎம்எக்ஸ்989 (IMX989) பிரைமரி கேமரா + 50எம்பி ஐஎம்எக்ஸ்598 (IMX598) அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 50எம்பி ஐஎம்எக்ஸ்758 (IMX758) டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் விவோ எக்ஸ்100 வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

50MP கேமரா.. நவ.13-ல் வருகிறது புதிய விவோ போன்.. எந்த மாடல்?

அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த போன் விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த போனின் கேமரா அமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போன்.

விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போனில் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதி இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ்இ 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. அதேபோல் இந்த போனின் டிஸ்பிளே தனித்துவமான திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

ஃபன்டச் ஓஎஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ( Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ எக்ஸ்100 போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

50MP கேமரா.. நவ.13-ல் வருகிறது புதிய விவோ போன்.. எந்த மாடல்?

அதேபோல் இந்த போனில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது. பின்பு இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போன். மேலும் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட ஸ்பீக்கர்கள் உடன் விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

120 வாட்ஸ் ஃபாஸட் சார்ஜிங் (120W fast charging) கொண்ட 5400 எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு இந்த போனில் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதேசமயம் இந்த போனை விரைவில் சார்ஜ் செய்ய முடியும்.

வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் விவோ எக்ஸ்100 போன் அறிமுகமாகும். ஆனால் இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.

Best Mobiles in India

English summary
Vivo X100 with 120W fast charging to launch on November 13: check specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X