Home
Mobile

வாவ் சொல்ல வைக்கும் விலை! வாய் பிளக்க வைக்கும் கேமரா.. Vivo X100, Vivo X100 Pro அறிமுகம்! ஜன.11 முதல் விற்பனை!

இதற்கு முன்பாக அறிமுகமான எல்லா வகையான கேமரா-சென்ட்ரிக் ஸ்மார்ட்போன்களையும் (Camera-centric Smartphones) அப்படியே ஓரங்கட்டும் விலை மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா அம்சங்களுடன் விவோ எக்ஸ்100 (Vivo X100) மற்றும் விவோ எக்ஸ்100 ப்ரோ (Vivo X100 Pro) ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

விவோ எக்ஸ்100, விவோ எக்ஸ்100 ப்ரோ இந்திய விலை விவரங்கள்: விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போன் மொத்தம் 2 ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களிலும், மறுகையில் உள்ள விவோ எக்ஸ்100 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Vivo X100, Vivo X100 Pro அறிமுகம்.. ஜன.11 முதல் விற்பனை!

விவோ எக்ஸ்100 மாடலின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.63,999 க்கும், ஹை-எண்ட் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆ[ஆப்ஷன் ரூ.69,999 க்கும், ப்ரோ மாடலான விவோ எக்ஸ்100 ப்ரோவின் சிங்கிள் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,999 க்கும் அறிமுகமாகி உள்ளது.

எப்போது முதல் விற்பனை? இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே இன்று (ஜனவரி 4) முதல் ப்ரீ-புக்கிங் செய்ய கிடைக்கும். பின்னர் ஜனவரி 11 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும். விவோ எக்ஸ்100 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை விஜய் சேல்ஸ், ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா, ஜியோ டிஜிட்டல் ஸ்டோர்ஸ் போன்ற ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களிலும் வாங்கலாம்.

Vivo X100, Vivo X100 Pro அறிமுகம்.. ஜன.11 முதல் விற்பனை!

அறிமுக சலுகைகளை பொறுத்தவரை, ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் வழியாக வாங்கினால் விவோ எக்ஸ்100 சீரீஸ் மீது 10 சதவீதம் வரையிலான கேஷ்பேக் கிடைக்கும் என்று விவோ இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது, மேலும் வாடிக்கையாளர்கள் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழியாக ரூ.8,000 வரையிலான தள்ளுபடியையும் பெறலாம்.

விவோ எக்ஸ்100 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: இது டூயல் சிம் ஆதரவு, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஒரிஜின்ஓஎஸ் 4, 6.78-இன்ச் AMOLED 8T LTPO கர்வ்டு டிஸ்பிளே, ஆக்டா-கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 சிப்செட், 16ஜிபி வரையிலான LPDDR5 ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்பில்ட் ஸ்டோரேஜை கொண்டுள்ளது.

Vivo X100, Vivo X100 Pro அறிமுகம்.. ஜன.11 முதல் விற்பனை!

கேமராக்களை பொறுத்தவரை, Zeiss பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்) ஆதரவுடன் 50 மெகாபிக்சல் Sony IMX989 1-இன்ச் சென்சார் + 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா + 50 மெகாபிக்சல் Zeiss APO சூப்பர் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில், 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்கை கொண்டுள்ள இந்த விவோ ஸ்மார்ட்போன் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு உடனான 5,400mAh பேட்டரியை பேக் செய்கிறது. விவோ நிறுவனத்தின் கூற்றுப்படி, வெறும் 12.5 நிமிடங்களில் இது பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 50 சதவீதம் வரை நிரப்பும்.

விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: ப்ரோ மாடலில் உள்ள அதே டூயல் சிம் அதரவு, சாஃப்ட்வேர் மற்றும் டிஸ்பிளேவை கொண்டுள்ள விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போன் ஆனது 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி வரையிலான LPDDR5 RAM மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை வழங்குகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, இதுவும் Zeiss-பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்புடன் வருகிறது. இதில் OIS உடன் 50 மெகாபிக்சல் Sony IMX920 VCS பயோனிக் மெயின் கேமரா + 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா + 100எக்ஸ் ஜூமிங்கை வழங்கும் 64-மெகாபிக்சல் Zeiss சூப்பர் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில், இது 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

தூசி மற்றும் தண்ணீரிலிருந்து பாதுகாப்பதற்கான ஐபி68 ரேட்டிங்கை கொண்டுள்ள இந்த விவோ ஸ்மார்ட்போன் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது, நிறுவனத்தின் கூற்றுப்படி இது வெறும் 11 நிமிடங்களில் 50 சதவிகிதம் வரை பேட்டரியை நிரப்பும். மேலும் இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 14.8 நாட்கள் ஸ்டேண்ட்பை டைமை வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X100 Vivo X100 Pro Launched in India Price Starts At Rs 63999 Sale From Jan 11
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X