Home
Mobile

வேற லெவலில் இருக்கும் Vivo X100 சீரீஸ்.. அவசரப்பட்டு வேற எந்த Best Camera Phone-ஐயும் வாங்கிடாதீங்க!

விவோ நிறுவனம் அதன் எக்ஸ்-சீரிஸின் கீழ் நெக்ஸ்ட் ஜெனெரஷன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. அது விவோ எக்ஸ்100 சீரிஸ் ஸ்மார்ட்போன்களாக இருக்கும் என்பதிலும், இதன்கீழ் விவோ எக்ஸ்100 ( Vivo X100) மற்றும் விவோ எக்ஸ்100 ப்ரோ (Vivo X100 Pro) மாடல்கள் அறிமுகமாகும் என்பதிலும் சந்தேகமே வேண்டாம்!

பெயர் குறிப்பிடுவது போலவே, இவ்விரு விவோ ஸ்மார்ட்போன்களுமே புகைப்படத் திறன்களுக்காக நன்கு அறியப்பட்ட விவோ எக்ஸ்90 சீரீஸின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளாக இருக்கும். விவோ எக்ஸ்100 சீரிஸின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட இவ்விரு போன்களை பற்றிய லீக்ஸ் தகவல்கள் தொடர்ச்சியாக வெளியான வண்ணம் உள்ளன.

வேற லெவலில் இருக்கும் Vivo X100 சீரீஸ்!

அப்படியாக சமீபத்தில் சீன டிப்ஸ்டர் ஒருவரின் வழியாக கிடைத்த தகவல், விவோ எக்ஸ்100 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் என்னென்ன கேமரா சென்சார்கள் இடம்பெறும் என்கிற விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, வெண்ணிலா வேரியண்ட் ஆன விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போன் ஆனது சோனி IMX920 மெயின் சென்சாரை உள்ளடக்கிய ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும்.

புகைப்படம் எடுக்கும் அனுபவத்தை மேம்படுத்தி, மிருதுவான மற்றும் துடிப்பான காட்சிகளை கைப்பற்ற உதவும் இந்த மெயின் கேமராவுடன் அல்ட்ரா-வைட் ஷாட்களுக்கான சாம்சங் JN1 லென்ஸும் இடம்பெறும். இந்த கேமரா அட்டகாசமான வைட் ஆங்கிள் புகைப்படங்களை உறுதிசெய்யும். மேலும், இதன் கேமரா செட்டப்பில் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட ஆம்னிவிஷன் OV64B டெலிஃபோட்டோ கேமராவும் இடம்பெறும். இது நம்பமுடியாத ஜூம் திறன்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேற லெவலில் இருக்கும் Vivo X100 சீரீஸ்!

மறுகையில் உள்ள விவோ எக்ஸ்100 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இதற்கு முன் அறிமுகமான எல்லா எக்ஸ்-சீரீஸ் போன்களை விடவும் ஒரு படி மேலே செல்லும் மெயின் கேமராவையும், வெண்ணிலா வேரியண்ட்டில் உள்ள அதே அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் டெலிஃபோட்டோ கேமராக்களை கொண்டிருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, விவோ எக்ஸ்100 ப்ரோ ஸ்மார்ட்போனின் மெயின் கேமராவாக 1-இன்ச் சோனி IMX989 கேமரா சென்சார் பேக் செய்யப்படலாம். சோனியின் இந்த பெரிய சென்சார், அதிக ஒளியை கைப்பற்றும் திறனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விளைவாக உங்களுக்கு ஈர்க்கக்கூடிய லோ-லைட் போட்டோக்கள் உங்களுக்கு கிடைக்கும்.

மேலும், விவோ எக்ஸ்100 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 4.3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட டெலிஃபோட்டோ ஷூட்டரை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொறுத்தவரை, விவோ எக்ஸ் 100 மற்றும் விவோ எக்ஸ்100 ப்ரோ ஆகிய இரண்டுமே மீடியாடெக்கின் வரவிருக்கும் டைமன்சிட்டி 9300 சிப் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது விரைவான மற்றும் திறமையான செயல்திறனை வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

வேற லெவலில் இருக்கும் Vivo X100 சீரீஸ்!

மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் சமீபத்திய LPDDR5T ரேம் தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கும். நினைவூட்டும் வண்ணம், தற்போதைய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் காணப்படும் LPDDR5X DRAM-ஐ விட LPDDR5T ரேம் ஆனது 13 சதவீதம் வேகமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது, இது ஸ்மூத் ஆன மற்றும் ரெஸ்பான்சிவ் ஆன யூசர் எக்ஸ்பீரியன்ஸை உறுதி செய்கிறது.

நினைவூட்டும் வண்ணம், விவோ எக்ஸ்90 சீரிஸின் கீழ் விவோ எக்ஸ்100 ப்ரோ பிளஸ் மாடலும் அறிமுகமானது. அதேபோன்ற ப்ரோ பிளஸ் மாடலானது விவோ எக்ஸ்100 சீரிஸின் கீழும் அறிமுகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் விவோ எக்ஸ90 ப்ரோ பிளஸ் மாடலானது இந்தியாவில் அறிமுகமாகவிகல்லை.

கடந்த ஏப்ரல் மாதத்தில், விவோ எக்ஸ்90 மற்றும் விவோ எக்ஸ்90 ப்ரோ மட்டுமே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆரம்பத்தில் ரூ.84,999 க்கு அறிமுகமான விவோ எக்ஸ்90 ப்ரோ ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் தற்போது ரூ.10,000 விலைகுறைப்பை பெற்று ரூ.74,999 க்கு வாங்க கிடைக்கிறது.மறுகையில் உள்ள வெண்ணிலா வேரியண்ட் ஆனது (8ஜிபி ரேம் + 256ஜிபி) ரூ.59,999 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X100 Vivo X100 Pro Camera Specifications Leaked Launch Soon Check Other Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X