Home
Mobile

கேமரா கிங்.. OLED டிஸ்பிளே.. 1டிபி மெமரி.. 200MP கேமரா.. வருகிறது புது விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது விவோ எகஸ்100 அல்ட்ரா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் மே 13-ம் தேதி இந்த புதிய விவோ எக்ஸ்10 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அதுவும் இந்த விவோ போன் முதலில் சீனாவில் தான் அறிமுகம் செய்யப்படும். அதன்பின்பு தான் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் அறிமுகமாகும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த விவோ எகஸ்100 அல்ட்ரா போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

கேமரா கிங்.. வருகிறது புது விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ எக்ஸ்100 அல்ட்ரா அம்சங்கள் (Vivo X100 Ultra secifications): சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 3 SoC) வசதி விவோ எக்ஸ்100 அல்ட்ரா போனில் உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விவோ எகஸ்100 அல்ட்ரா போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவோ ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா கிங்.. வருகிறது புது விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?

6.78-இன்ச் 1.5கே எல்டிபிஓ ஒஎல்இடி (1.5K 8T LTPO OLED) டிஸ்பிளே உடன் விவோ எகஸ்100 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

200எம்பி Zeiss APO சூப்பர் டெலிபோட்டோ லெனஸ் + 50எம்பி LYT-900 மெயின் கேமரா + பெரிஸ்கோப் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ எகஸ்100 அல்ட்ரா போன். எனவே இந்த ஸ்மார்ட்போன்உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த புதிய விவோ போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன. குறிப்பாக இதன் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம். எனவே சிறந்த கேமரா போன் வாங்க நினைக்கும் பயனர்கள் இதை நம்பி வாங்கலாம்.

அதேபோல் 5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த விவோ எகஸ்100 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் தான் இந்த விவோ போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் தான் விவோ எக்ஸ்100 அல்ட்ரா போன் வெளிவரும்.

கேமரா கிங்.. வருகிறது புது விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?

ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த விவோ எகஸ்100 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். இதுதவிர பல சிறப்பு அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, விவோ எகஸ்100 அல்ட்ரா போன் ஆனது ரூ.77,300 விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் விவோ எக்ஸ்100 அல்ட்ரா போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X100 Ultra Launch Date Revealed: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X