அம்புட்டு Camera Phones-ம் அப்பீட்டு! அல்டிமேட் விலையில் 100x ஜூமிங், சூப்பர் Telephoto லென்ஸ்! என்ன மாடல்?
சீன சந்தையில் அறிமுகமான பிறகு, விவோ நிறுவனத்தின் கேமரா சென்ட்ரிக் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான (Camera Centric Flagship Smartphones) விவோ எக்ஸ்100 (Vivo X100) மற்றும் விவோ எக்ஸ்100 ப்ரோ (Vivo X100 Pro) மாடல்கள் உலகளாவிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இவ்விரு ஸ்மார்ட்போன்களும் சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரிஸ் மற்றும் (ஜனவரி 2024 இல் அறிமுகமாக) கேலக்ஸி எஸ்24 சீரிஸ் உடன் கடுமையாக போட்டியிடும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? என்ன விலைக்கு வருகிறது? இதோ விவரங்கள்:

விவோ எக்ஸ்100 ப்ரோ என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? டூயல் சிம் ஆதரவு, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஒரிஜின்ஓஎஸ் 4 ஓஎஸ், 6.78-இன்ச் அமோஎல்இடி 8டி எல்டிபிஓ கர்வ்டு டிஸ்பிளே, ஆக்டா-கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 சிப்செட், 16ஜிபி வரை எல்பிடிடிஆர்5 ரேம் மற்றும் 1டிபி வரை யுஎஃப்எஸ்4.0 இன்பில்ட் ஸ்டோரேஜ் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.
கேமராக்களை பொறுத்தவரை, ஸெய்ஸ் பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ஓஐஎஸ் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்) ஆதரவுடன் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்989 1-இன்ச் சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா + 50எம்பி ஸெய்ஸ் ஏபிஓ சூப்பர் டெலிஃபோட்டோ கேமராக்கள் உள்ளது. முன்பக்கத்தில், 32எம்பி செல்ஃபீ கேமரா உள்ளது.

தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68ரேட்டிங்கை கொண்டுள்ள விவோ எக்ஸ்100 ப்ரோ மாடல் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு உடனான 5,400mAh பேட்டரியை பேக் செய்கிறது. விவோ நிறுவனத்தின் கூற்றுப்படி, இது வெறும் 12.5 நிமிடங்களில் பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 50% வரை சார்ஜ் செய்யும்.
விவோ எக்ஸ்100 என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இது ப்ரோ மாடலில் உள்ள அதே டூயல் சிம் ஆதரவு, சாஃப்ட்வேர் மற்றும் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஆனால் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5 ரேம் மற்றும் 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இதுவும் ஸெய்ஸ் பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்புடன் வருகிறது. அதில் ஓஐஎஸ் ஆதரவு உடனான 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்920 விசிஎஸ் பயோனிக் மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா + 100எக்ஸ் ஜூமிங்கை வழங்கும் 64எம்பி ஸெய்ஸ் சூப்பர்-டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி செல்ஃபீ கேமரா உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் தூசி மற்றும் தண்ணீரிலிருந்து பாதுகாப்பதற்கான ஐபி68 ரேட்டிங்கை கொண்டுள்ளது. கடைசியாக இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது, நிறுவனத்தின் கூற்றுப்படி இது வெறும் 11 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 50% வரை பேட்டரியை சார்ஜ் செய்யும்.

என்ன விலை? உலகளாவிய சந்தையில் அறிமுகமாகி உள்ளது என்றால், முக்கியமாக ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசிய சந்தைகளை உள்ளடக்கும். விரைவில் இது இந்தியாவிலும் அறிமுகமாகும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, சீன சந்தையில் விவோ எக்ஸ்100 மற்றும் எக்ஸ்100 ப்ரோ ஆகிய இரண்டும் பல ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகியுள்ளது.
விவோ எக்ஸ்100 ப்ரோவின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.56,500 க்கும், மறுகையில் உள்ள விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் தோராயமாக ரூ.50,000 க்கும் அறிமுகமானது.
ஹாங்காங் சந்தையில் இது விவோ எக்ஸ்100 ப்ரோவின் சிங்கிள் 16ஜிபி + 512ஜிபி ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.85,224 க்கும், விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.63,917 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே போன்ற விலையை நாம் இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம் மற்றும் இந்தியாவில் அறிவிக்கப்படும்போது இவைகளின் ரேம் + ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் வேறுபடலாம்.


Click it and Unblock the Notifications








