மார்கெட் காலி.. QUAD கேமரா சிஸ்டம்.. OV டெலிபோட்டோ.. 120W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 16GB ரேம்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டையும் அதிரவிடும் விதமாக 16ஜிபி ரேம், 1டிபி மெமரி, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 5400mAh பேட்டரி, குவாட் கேமரா சிஸ்டம் போன்ற உச்சகட்ட பிரம்மாண்ட அம்சங்களுடன் விவோ எக்ஸ் 100 ப்ரோ (Vivo X100 Pro) போன் வெளியாகிறது.
வரும் நவம்பர் 13ஆம் தேதி விவோ எக்ஸ் 100 (Vivo X100) மற்றும் விவோ எக்ஸ் 100 ப்ரோ போன்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்த நேரத்தில், விவோ எக்ஸ் 100 ப்ரோ மாடலின் டிசைன் மற்றும் கலர் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தகவலோடு, அந்த போனின் கசிந்த அம்சங்கள் மற்றும் விலை விவரங்களை இங்கே கொடுத்துள்ளோம்.

விவோ எக்ஸ் 100 ப்ரோ அம்சங்கள் (Vivo X100 Pro Specifications): இந்த விவோ போன் 6.78 இன்ச் கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. 1.5K ரெசொலூஷன் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் பிரம்மாண்டமான குவாட் ரியர் கேமரா சிஸ்டம் (Quad Rear Camera System) வருகிறது.
ஆகவே, பெரிஸ்கோப் டெலிபோட்டோ (Periscope Telephoto) லென்ஸ் கொண்ட 1 இன்ச் பிரைமரி ஸ்னாப்பர் (Primary Snapper) கொடுக்கப்பட்டுள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்989 (Sony IMX989) சென்சார் கொண்ட 50 எம் மெயின் கேமரா + ஓம்னிவிஷன் ஓவி64பி (OmniVision OV64B) சென்சார் கொண்ட 64 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வருகிறது.
அதோடு சோனி ஐஎம்எக்ஸ்663 (Sony IMX663) சென்சார் கொண்ட 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 8 எம்பி மேக்ரோ கேமரா செட்டப் வருகிறது. அதேபோல 32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 9300 (MediaTek Dimensity 9300) சிப்செட் கொண்டிருக்கிறது.

அதோடு ஓர்ஜின் ஓஎஸ் 4 (Origin OS 4) வருகிறது. இந்த விவோ போனில் 120W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5400mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. இந்த போன் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் வெளியாகிறது.
இந்த விவோ எக்ஸ் 100 மாடலில் ஸ்டார் ட்ரெய்ல் ப்ளூ (Star Trail Blue), சன்செட் ஆர்ஞ்ச் (Sunset Orange), வைடு மூன்லைட் (White Moonlight) மற்றும் சென்யே பிளாக் (Chenye Black) ஆகிய நான்கு கலர்கள் இருக்கின்றன. இதில் ஆரஞ்ச் வேரியண்ட்டில் லெதர் பினிஷிங் பேக் பேனல் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் (In-Display Fingerprint Scanner), டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) வருகின்றன. அதேபோல எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் (X-Axis Linear Motor) மற்றும் ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.57,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
அதேபோல விவோ எக்ஸ் 100 மாடலின் விலை ரூ.45,000 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த விவோ எக்ஸ்100 சீரிஸ் மாடல்கள் வரும் நவம்பர் 13ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படுகின்றன. அதன் பின்பு அடுத்தடுத்த நாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இந்த போன்களில் கொடுக்கப்பட்டிருக்கும் கேமரா செட்டப் ஒட்டுமொத்த கேமரா பிரியர்களின் கவனத்தையும் ஈர்க்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications