இதான் Phone-னு.. மத்ததெல்லாம் வீணு.. 16GB ரேம், மூன்று 50MP கேமரா, 120W சார்ஜிங்.. என்ன மாடல்? என்ன விலை?
விவோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களாக விவோ எக்ஸ்100 ப்ரோ (Vivo X100 Pro) மற்றும் விவோ எக்ஸ்100 (Vivo X100) மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவ்விரு மாடல்களின் விலை நிர்ணயம் என்ன? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:
விவோ எக்ஸ்100 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: இது டூயல் சிம் ஆதரவு, ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான ஒரிஜின்ஓஎஸ் 4, 6.78-இன்ச் AMOLED 8T LTPO கர்வ்டு டிஸ்பிளே, ஆக்டா-கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 சிப்செட், 16GB வரை LPDDR5 ரேம் மற்றும் 1TB வரை UFS4.0 இன்பில்ட் ஸ்டோரேஜ் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

கேமராக்களை பொறுத்தவரை, Zeiss பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் Sony IMX989 1-இன்ச் சென்சார் + 50-மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா + 50-மெகாபிக்சல் Zeiss APO சூப்பர் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில், 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.
தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மதிப்பீட்டை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு உடனான 5,400mAh பேட்டரியை பேக் செய்கிறது. விவோ நிறுவனத்தின் கூற்றுப்படி, வெறும் 12.5 நிமிடங்களில் இது பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 50 சதவீதம் வரை நிரப்பும்.

விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: ப்ரோ மாடலில் உள்ள அதே டூயல் சிம் அதரவு, சாஃப்ட்வேர் மற்றும் டிஸ்பிளேவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 16GB வரையிலான LPDDR5 RAM மற்றும் 1TB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜையும் வழங்குகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, இது Zeiss-பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்புடன் வருகிறது. இதில் OIS உடன் 50-மெகாபிக்சல் Sony IMX920 VCS பயோனிக் மெயின் கேமரா + 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + 100x தெளிவான ஜூமிங்கை வழங்கும் 64-மெகாபிக்சல் Zeiss சூப்பர்-டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில், இது 32 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் உள்ளது.

தூசி மற்றும் தண்ணீரிலிருந்து பாதுகாப்பதற்கான ஐபி68 மதிப்பீட்டை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது, நிறுவனத்தின் கூற்றுப்படி இது வெறும் 11 நிமிடங்களில் 50 சதவிகிதம் வரை பேட்டரியை நிரப்பும். மேலும் இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 14.8 நாட்கள் காத்திருப்பு நேரத்தையும் வழங்கும்.
விவோ எக்ஸ்100 மற்றும் விவோ எக்ஸ்100 ப்ரோ விலை: சீனாவில் விவோ எக்ஸ்100 ப்ரோவின் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது இந்திய ருபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.56,500க்கும், 16GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் சுமார் ரூ.60,000க்கும், 16GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் தோராயமாக ரூ.62,000க்கும், 16GB ரேம் + 1TB ஸ்டரோஜ் சுமார் ரூ.68,000க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ப்ரோ மாடலை போலவே வெண்ணிலா வேரியண்ட் ஆன விவோ எக்ஸ்100 மாடலும் கூட மொத்தம் 4 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸிக் ஸ்டரோஜ் ஆப்ஷனின் விலை ரூ.50,000 முதல் தொடங்கி ஹை எண்ட் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.58,000 வரை செல்கிறது.
கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை, இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே சென் யே பிளாக், ஸ்டார் டிரெயில் ப்ளூ, சன்செட் ஆரஞ்சு மற்றும் ஒயிட் மூன்லைட் என்கிற 4 கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவ்விரு ஸ்மார்ட்போன்களும் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்பது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை; இவைகள் அடுத்தாண்டு வாக்கில் இந்திய சந்தைக்கு வரலாம்.


Click it and Unblock the Notifications








