Home
Mobile

வாங்குறதுக்கு தவம் கெடக்கலாம்.. பெரிஸ்கோப் டெலிபோட்டோ.. 100W சார்ஜிங்.. 1.5K டிஸ்பிளே.. எந்த மாடல்?

மிட்-ரேன்ஞ் விலையில் பெஸ்ட் கேமரா மாடல்களுக்கு பெயர்பெற்ற விவோ நிறுவனம், இப்போது பிரம்மாண்ட பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கொண்ட போன்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது. அடுத்து வரப்போகும் பிளாக்ஷிப் மாடல்களில் சாம்சங் நிறுவனத்தின் 200எம்பி எச்பிவி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கொடுக்கப்பட இருக்கிறது.

இந்த பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, விவோ எஸ்க் 100 சீரிஸ் (Vivo X100 Series) போன்களில் இடம்பெற்றுள்ளதாக, இப்போது புதிய தகவல் வெளியாகி, அந்த பிராண்ட் பிரியர்களிடையே மிகப்பெரும் ஆர்வத்தை தூண்டிவிட்டுள்ளது. விவோ எக்ஸ் 100 சீரிஸ் மாடல்களில் விவோ எக்ஸ் (Vivo X100), விவோ எக்ஸ் ப்ரோ (Vivo X100 Pro), விவோ எக்ஸ் ப்ரோ பிளஸ் (Vivo X100 Pro+) ஆகிய மூன்று போன்கள் வெளியாக இருக்கிறது.

பெரிஸ்கோப் டெலிபோட்டோ.. 100W சார்ஜிங்.. 1.5K டிஸ்பிளே.. எந்த மாடல்?

இதில் விவோ எக்ஸ் 100 ப்ரோ போனின் அம்சங்கள், போட்டோக்கள் இப்போது, கசிந்து விட்டன. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K ரெசொலூஷன் ஓஎல்இடி டிஸ்பிளே, 100W வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், 1 இன்ச் பிரைமரி ஸ்னாப்பர், பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, குவாட் பேக் செட்டப், லெதர் பினிஷிங் என்று பட்டையை கிளப்புகிறது.

விவோ எக்ஸ் 100 ப்ரோ அம்சங்கள் (Vivo X100 Pro specifications): இந்த விவோ போன் 6.82 இன்ச் ஓஎல்இடி (OLED) கர்வ்ட் டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K ரெசொலூஷன் கொடுக்கப்பட்டுள்ளது. 1 இன்ச் பிரைமரி ஸ்னாப்பர் (Primary Snapper) மற்றும் பெரிஸ்கோப் டெலிபோட்டோ (Periscope Telephoto) கொண்ட குவாட் பேக் கேமரா செட்டப் கொண்டுள்ளது.

அந்த வகையில், சோனி ஐஎம்எக்ஸ்989 (Sony IMX989) சென்சாருடன் கூடிய 50 எம் மெயின் கேமரா + ஓம்னிவிஷன் ஓவி64பி (OmniVision OV64B) சென்சாருடன் கூடிய 64 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்663 (Sony IMX663) சென்சாருடன் கூடிய 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8 எம்பி மேக்ரோ கேமரா செட்டப் வருகிறது. 50 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த போன் ஆண்ட்ராய்ட் 13 ஓஎஸ் உடன் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 (MediaTek Dimensity 9300) சிப்செட் கொண்டிருக்கிறது. இந்த போன் 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. 5000mAh பேட்டரி கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி என்னும் வேரியண்ட்களில் வெளியாக வாய்ப்புள்ளது.

அதேபோல பிளாக்ஷிப் போன்களில் கொடுக்கப்படும், அண்டர் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் (Under-Display Fingerprint Scanner), எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் (X-Axis Linear Motor), ஐஆர் பிளாஸ்டர் (IR blaster) மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) கொண்டுள்ளது. இந்த போன் ரெட் (Red), பிளாக் (Black), கிரீன் (Green), வைட் (White) ஆகிய நான்கு கலர்களில் விற்பனைக்கு வரவிருக்கிறது.

இதில் ரெட் மற்றும் பிளாக் மாடல்களில் லெதர் பினிஷிங் பேக் பேனல் செட்டப் வருகிறது. இந்த போன் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த போனின் விலையை பொறுத்தவரையில், ரூ.40 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியாகலாம். 200 எம்பி டெலிபோட்டோ கேமரா விவோ எக்ஸ் 100 ப்ரோ பிளஸ் மாடலில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X100 Pro Tipped With 100W Charging 1 5K OLED Display 64 MP Camera Expect Price, Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X