Home
Mobile

எந்த போனும் நிக்க முடியாது.. 200MP கேமரா.. 6.78-இன்ச் டிஸ்பிளே.. வருகிறது புதிய விவோ போன்.. என்ன மாடல்?

விவோ நிறுவனம் விரைவில் விவோ எக்ஸ்100 ப்ரோ பிளஸ் எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் உலக சந்தை மற்றும் இந்தியச் சந்தையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் விவோ எக்ஸ்90 சீரிஸ் போன்களுக்கு பிறகு இந்த விவோ எக்ஸ்100 ப்ரோ பிளஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 200எம்பி டெலிபோட்டோ கேமரா, பாஸ்ட் சார்ஜிங் வசதி எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த விவோ எக்ஸ்100 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த விவோ எக்ஸ்10 ப்ரோ பிளஸ் போனின் அம்சங்களை இங்கே சற்று விரிவாகப் பார்ப்போம்.

 200MP கேமரா.. 6.78-இன்ச் டிஸ்பிளே.. வருகிறது புதிய விவோ போன்..

விவோ எக்ஸ்100 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 1-இன்ச் சோனி IMX989 பிரைமரி சென்சார்+ 200எம்பி டெலிபோட்டோ கேமரா + 50எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு மேகரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோ எக்ஸ்100 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்.

அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த விவோ எக்ஸ்100 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த போன். 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும்.

குறிப்பாக விவோ எக்ஸ்100 ப்ரோ பிளஸ் போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் வசதி உள்ளது. பின்பு 16ஜிபி ரேம், 512ஜிபி ஸ்டோரேஜ், 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும். குறிப்பாக விவோ எக்ஸ்100 ப்ரோ பிளஸ் போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்த விவோ Y77t (vivo Y77t) போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

புதிய விவோ Y77t போன் 6.64-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (Full HD+) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (240Hz touch sampling rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

விவோ Y77t ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆக்டோ-கோர் மீடியாடெக் 7020 6என்எம் பிராசஸர் (MediaTek Dimensity 7020 6nm processor) உடன் ஐஎம்ஜி பிஎக்ஸ்எம்-8-256 ஜிபியு ஆதரவு இதில் உள்ளது.

 200MP கேமரா.. 6.78-இன்ச் டிஸ்பிளே.. வருகிறது புதிய விவோ போன்..

OriginOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய விவோ Y77t போன் வெளிவந்துள்ளது. அதேபோல் 8ஜிபி/12ஜிபி ரேம் மறறும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு இதில் உள்ளது. 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது இந்த போன். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் (44W fast charging) வசதி உள்ளது.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஸ்எஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய விவோ Y77t போன். மேலும் கருப்பு, நீலம் மற்றும் தங்க நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ Y77t போனின் விலை 1399 யுவான் (yuan) (இந்திய மதிப்பில் ரூ.15,950). மேலும் இதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் விலை 1599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.18,230). விரைவில் இந்த விவோ Y77t போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X100 Pro Plus smartphone Advanced Camera Features Revealed: check full details here: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X