200எம்பி டெலிபோட்டோ கேமராவுடன் புதிய 5ஜி போனை இறக்கிவிடும் Vivo.! ரெடியா இருங்க..
விவோ நிறுவனம் தரமான கேமரா வசதியைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது என்றே கூறலாம். குறிப்பாக இந்தியாவில் விவோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஒவ்வொரு போனுக்கும்நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஒரு புதிய போனை அறிமுகம் செய்ய உள்ளது விவோ நிறுவனம்.
அதாவது விவோ நிறுவனம் விரைவில் புதிய விவோ எக்ஸ்100 ப்ரோ பிளஸ் ( Vivo X100 Pro+) ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான கேமரா அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

விவோ எக்ஸ்100 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது என விவோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவோ எக்ஸ்100 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 1-இன்ச் சோனி IMX989 பிரைமரி சென்சார்+ 200எம்பி டெலிபோட்டோ கேமரா + அல்ட்ரா வைடு கேமரா + மேக்ரோ கேமரா என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும்.

அதேபோல் 6.7-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே,16ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், 5000எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி எனப் பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும். குறிப்பாக இந்த விவோ எக்ஸ்100 ப்ரோ பிளஸ் போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த விவோ Y78 5ஜி(Vivo Y78 5G) போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
விவோ Y78 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 2400 × 1080 பிக்சல்ஸ், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த விவோ போனை பார்ப்பதற்கு சமீபத்திய ஒன்பிளஸ் போன் போன்றே உள்ளது.
குவால்காம் ஸ்னாப்ராகன் 695 சிப்செட் உடன் அட்ரினோ ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ Y78 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு Funtouch OS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
விவோ Y78 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ Y78 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு விவோ Y78 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனில் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.
பின்பு 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய விவோ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ Y78 5ஜி ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications