விலை இவ்ளோ தானா.. அப்போ ஆர்டர் வெளுக்க போகுது.. ஜன.4-க்கு அப்புறம் மார்க்கெட்டை ரூல் பண்ண போகும் 2 போன்கள்!
2024 ஜனவரி 4 ஆம் தேதியன்று இந்திய மொபைல் சந்தையில் சலசலப்பு ஏற்பட போவது உறுதி! ஏனென்றால் குறிப்பிட்ட தேதியில் அறிமுகம் செய்யப்படவுள்ள 2 ஸ்மார்ட்போன்களின் விலையும், அம்சங்களும் அப்படி! அதென்ன ஸ்மார்ட்போன்கள்? அவற்றின் விலை என்ன? அம்சங்கள் என்ன? இதோ விவரங்கள்:
அதென்ன ஸ்மார்ட்போன்கள்? ஜனவரி 4 ஆம் தேதியன்று விவோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் கேமரா ஸ்மார்ட்போன்கள் (Flagship Camera Smartphones) ஆன விவோ எக்ஸ்100 (Vivo X100) மற்றும் விவோ எக்ஸ்100 ப்ரோ (Vivo X100 Pro) இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இவ்விரு மாடல்களும் ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகி விட்டதால், இவைகளின் அம்சங்கள் குறித்து எந்த குழப்பமும் இல்லை. "விவோ எக்ஸ்100 சீரீஸின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?" என்பது தான் ஒரே ஒரு கேள்வியாக இருந்தது. தற்போது அதற்கும் விடை கிடைத்துள்ளது.
என்ன விலைக்கு வரும்? தி அவுலலுக் வழியாக வெளியான சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.63,999 க்கும், 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.69,999 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

மறுகையில் உள்ள விவோ எக்ஸ்100 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் சீனாவில் விவோ எக்ஸ்100 ப்ரோ மற்றும் விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போன்கள் (இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக) ரூ.56,500 மற்றும் ரூ.50,000 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டன.
பின்னர் இதே ஸ்மார்ட்போன்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய நாடுகளில் (இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக) ரூ.85,200 மற்றும் ரூ. 63,900 என்கிற ஆரம்ப விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது இவ்விரு விவோ எக்ஸ்100 சீரீஸ் ஸ்மார்ட்போன்களும் ஜன.4 ஆம் தேதியன்று இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

விவோ எக்ஸ்100 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டூயல் சிம் ஆதரவு, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஒரிஜின்ஓஎஸ் 4 உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் AMOLED 8T LTPO கர்வ்டு டிஸ்பிளே, ஆக்டா-கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 சிப்செட், 16GB வரை LPDDR5 ரேம் மற்றும் 1TB வரை UFS4.0 இன்பில்ட் ஸ்டோரேஜ் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.
கேமராக்களை பொறுத்தவரை, Zeiss பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்) ஆதரவுடன் 50எம்பி சோனி IMX989 1-இன்ச் சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா + 50எம்பி Zeiss APO சூப்பர் டெலிஃபோட்டோ கேமராக்களை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 32எம்பி செல்பீ கேமரா உள்ளது.
தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்கை கொண்டுள்ள விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போன் ஆனது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு உடனான 5,400mAh பேட்டரியை கொண்டுள்ளது. விவோவின் கூற்றுப்படி, இது வெறும் 12.5 நிமிடங்களில் பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 50% வரை சார்ஜ் செய்யும்.
விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: ப்ரோ மாடலில் உள்ள அதே டூயல் சிம் அதரவு, சாஃப்ட்வேர் மற்றும் டிஸ்பிளேவை கொண்டுள்ள விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போன் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 16GB வரையிலான LPDDR5 RAM மற்றும் 1TB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, இதுவும் Zeiss-பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்புடன் வருகிறது. அதில் ஓஐஎஸ் ஆதரவு உடனான 50எம்பி சோனி IMX920 VCS பயோனிக் மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + 100x தெளிவான ஜூமிங்கை வழங்கும் 64எம்பி Zeiss சூப்பர்-டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது.
ப்ரோ மாடலை போல இதுவும் தூசி மற்றும் தண்ணீரிலிருந்து ஸ்மார்ட்போனை பாதுகாப்பதற்கான ஐபி68 ரேட்டிங்கை கொண்டுள்ளது. கடைசியாக இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. விவோவின் கூற்றுப்படி இது வெறும் 11 நிமிடங்களில் பேட்டரியை 50% வரை சார்ஜ் செய்யும்!


Click it and Unblock the Notifications








