எழுதி வச்சிக்கோங்க.. பல Best Camera Phone-களை விரட்ட போகும் 2 VIVO போன்கள்! அப்படி என்ன மாடல்கள்?
தற்போது சந்தையில் வாங்க கிடைக்கும் பல பெஸ்ட் கேமரா ஸ்மார்ட்போன்களை ஓரங்கட்டும் அளவிலான 2 விவோ ஸ்மார்ட்போன்கள் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. அதென்ன மாடல்கள்? எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:
என்ன மாடல்கள்? சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான விவோ தனது நெக்ஸ்ட் ஜெனரேஷன் பிரீமியம் ஸ்மார்ட்போன்களான விவோ எக்ஸ்100 (Vivo X100) மற்றும் விவோ எக்ஸ்100 ப்ரோ (Vivo X100 Pro) கூடியவ் விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வழக்கம் போல, விவோவின் இந்த எக்ஸ் சீரீஸ் ஸ்மார்ட்போன்களும் கூட மொபைல் போட்டோகிராஃபி (Mobile Photography) மீது அதிக கவனம் செலுத்தும் என்பதில் சந்தேகமே வேண்டாம். மேலும் இவ்விரு ஸ்மார்ட்போன்களும் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ எக்ஸ்90 சீரீஸின் (Vivo X90 Series) தொடர்ச்சியாக இருக்கும்.
எப்போது அறிமுகமாகும்? விவோ எக்ஸ்100 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது வருகிற நவம்பர் மாத நடுப்பகுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரீஸில் இடம்பெறவுள்ள மீடியாடெக் டைமன்சிட்டி 9300 சிப்செட் (MediaTek Dimensity 9300 Chipset) ஆனது நவம்பர் 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
மீடியாடெக் நிறுவனத்தின் இந்த புதிய சிப்செட் அறிமுகமான பின்னரே விவோ எக்ஸ்100 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் விவோ எக்ஸ்100 சீரிஸ் ஆனது நவம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் (நவம்பர் 13 - 15) அறிமுகம் செய்யப்படலாம்.
புதிய டைமன்சிட்டி 9300 சிப்செட் ஆனது விவோ எக்ஸ்100 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு, ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (Apple iPhone 15 Pro) போன்ற செயல்திறனை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில், பாண்டா இஸ் பால்ட் (Panda is Bald) என்கிற சீன டிப்ஸ்டர் விவோ எக்ஸ்100 மற்றும் விவோ எக்ஸ்100 ப்ரோ மாடல்களின் கேமரா, பேட்டரி மற்றும் சார்ஜிங் தொடர்பான அம்சங்களை லீக் செய்துள்ளார்.
விவோ எக்ஸ்100, விவோ எக்ஸ்100 ப்ரோவில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? மெயின் கேமராவை பொறுத்தவரை, விவோ எக்ஸ்100 சீரீஸின் வெண்ணிலா வேரியண்ட் ஆன விவோ எக்ஸ்100 மாடலானது சோனி ஐஎம்எக்ஸ்920 ப்ரைமரி கேமரா (Sony IMX920 Primary Camera) கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 120வாட் வயர்டு சார்ஜிங்கை (120W Wired Charging) ஆதரிக்கும் 5100எம் ஏஏஎச் பேட்டரியை பேக் செய்யலாம். விவோ எக்ஸ்90 (Vivo X90) ஸ்மார்ட்போனை போலவே, விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் (Wireless Charging Feature) இடம்பெறாமல் போகலாம்.
மறுகையில் உள்ள ப்ரோ மாடலான, விவோ எக்ஸ்100 ப்ரோவானது சோனி ஐஎம்எக்ஸ் (Sony IMX989) சென்சார் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது 100வாட் வயர்டு சார்ஜிங் (100W Wired Charging) மற்றும் 50வாட் வயர்லெஸ் சார்ஜிங்கை (50W Wirless Charging) ஆதரிக்கும் 5400எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற கேமராக்களை பொறுத்தவரை இந்த சீரீஸில் உள்ள 2 ஸ்மார்ட்போன்களுமே ஐஎம்எக்ஸ்663 அல்ட்ரா-வைட் லென்ஸ் (IMX663 Ultra-wide Lens) மற்றும் 64-மெகாபிக்சல் பெரிஸ்கோப் ஜூம் கேமராவை (64-megapixel Periscope Zoom Camera) கொண்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே சீரிஸின் கீழ் வரும் விவோ எக்ஸ்100 ப்ரோ பிளஸ் (Vivo X100 Pro Plus) மாடலானது 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவோ எக்ஸ்100 சீரிஸின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? வெண்ணிலா வேரியண்ட் ஆன விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போனானது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.59,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். மறுகையில் உள்ள ப்ரோ வேரியண்ட் ஆன விவோ எக்ஸ்100 ப்ரோ மாடலானது தோராயமாக ரூ.64,990 க்கும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








