Home
Mobile

Vivo வெச்சான் பாருங்க.. 200MP கேமரா.. 6900mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

விவோ நிறுவனத்தின் பிரீமியம் போல்டு மாடலான விவோ எக்ஸ் போல்டு6 (Vivo X Fold6) குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) கொண்ட மாடலாக களமிறங்கி இருக்கிறது. 200 எம்பி கேமரா, 6900mAh பேட்டரி போன்ற மற்ற பீச்சர்களும் பட்டையை கிளப்புகின்றன. இதுகுறித்த விவரம் இதோ.

சீன மார்கெட்டுக்கு பிறகு குளோபல் மார்கெட்டில் விவோ எக்ஸ் போல்டு6 ஸ்மார்ட்போன் களமிறங்கி இருக்கிறது. டிசைனில் பெரிய மாற்றம் இல்லை. பீச்சர்களும் பெரும்பாலும் சீன வேரியண்ட்டை போலவே இருக்கின்றன. இருப்பினும், கேமரா பீச்சர்கள் அல்ட்ரா பிரீமியமாக இருப்பதால், எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

Vivo வெச்சான் பாருங்க.. 200MP கேமரா.. 6900mAh பேட்டரி.. 80W சார்ஜிங்!

விவோ எக்ஸ் போல்டு6 அம்சங்கள் (Vivo X Fold6 Specifications): 8.02 இன்ச் (2504 x 2312 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) உள்ளது. 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 6.51 இன்ச் (2528 x 1120 பிக்சல்கள்) அவுட்டர் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது.

ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சூப்பர் எடிஷன் 3என்எம் (Octa Core MediaTek Dimensity 9500 Super Edition 3nm) சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி ஜி1 அல்ட்ரா எம்சி12 ஜிபியு (Arm Mali G1 Ultra MC12 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது.

ஓர்ஜின்ஓஎஸ் 7 (OriginOS 7) கிடைக்கிறது. லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. சாம்சங் எச்பிபி (Samsung HPB) சென்சாருடன் 200 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி மற்றும் ஜீஸ் ஆப்டிக்ஸ் கிடைக்கிறது. சோனி எல்ஒய்டி602 (Sony LYT602) சென்சாருடன் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது.

மேலும், சோனி எல்ஒய்டி602 (Sony LYT602) சென்சாருடன் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவை கொடுக்கிறது. 20 எம்பி செல்பீ கேமராவை இந்த விவோ எக்ஸ் போல்டு6 கொடுக்கிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6900mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. 40W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கிறது. அல்ட்ரா பிரீமியம் மாடலாக இருப்பதால், IP58 ரேட்டிங், IP59 ரேட்டிங், IPX8 ரேட்டிங் மற்றும் IPX9 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA/NSA) கிடைக்கிறது.

டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 7 (Wi-Fi 7) உள்ளது. பிரிசம் பிளாக் (Prism Black) மற்றும் அரிசோன் ப்ளூ (Horizon Blue) ஆகிய கலர்களில் வெளியாகி இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருப்பதால், விலை விவரங்கள் தெரியவில்லை. சீனாவில் ரூ.1,12,000 பட்ஜெட்டில் வெளியாகியது. மற்ற நாடுகளின் விலை ஓரிரு வாரங்களில் தெரியவரும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X