Home
Mobile

மிரண்டு போவீங்க.. 8.03 இன்ச் டிஸ்பிளே.. ZEISS ஆப்டிக்ஸ்.. 50MPடெலிபோட்டோ.. 16GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?

போல்டு போன் பிரியர்களை தட்டித்தூக்கும்படி 8.03 இன்ச் மெயின் டிஸ்பிளே, 6.53 இன்ச் அவுட்டர் டிஸ்பிளே மட்டுமல்லாமல், சோனி சென்சாருடன் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, 80W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 6000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் விவோ எக்ஸ் போல்டு5 (Vivo X Fold5) வெளியாகி இருக்கிறது. சீனாவில் இப்போது கிடைக்க இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் விரைவில் எதிர்பார்க்கலாம். இந்த போல்டு மாடலின் முழு விவரங்கள் இதோ.

விவோ எக்ஸ் போல்டு5 அம்சங்கள் (Vivo X Fold5 Specifications): இந்த போல்டு போனில் ஓர்ஜின்ஓஎஸ் 5 (OriginOS 5) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. இந்த பிரீமியம் பட்ஜெட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (4nm Octa Core Snapdragon 8 Gen 3) சிப்செட் கிடைக்கிறது.

மிரண்டு போவீங்க.. 8.03 இன்ச் டிஸ்பிளே.. ZEISS ஆப்டிக்ஸ்.. எந்த மாடல்?

இந்த சிப்செட்டுக்கு ஏற்ப அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. யூடிஜி கிளாஸ் (UTG Glass) புரொடெக்சன் கொண்ட 8.03 இன்ச் (2480 x 2200 பிக்சல்கள்) இன்னர் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2K ரெசொலூஷன் கிடைக்கிறது.

ஓடிடி பிரியர்கள் விரும்பும்படி எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கிடைக்கிறது. ஆர்மர் கிளாஸ் (Armor Glass) புரொடெக்சன் கொண்ட 6.53 இன்ச் (2748 x 1172 பிக்சல்கள்) அவுட்டர் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் டால்பி விஷன் கிடைக்கிறது. ஆகவே, டேப்லெட்டை தூக்கி சாப்பிடும்படியான டிஸ்பிளே பீச்சர்கள் வருகின்றன. இந்த விவோ எக்ஸ் போல்டு5 போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் இருக்கின்றன.

மிரண்டு போவீங்க.. 8.03 இன்ச் டிஸ்பிளே.. ZEISS ஆப்டிக்ஸ்.. எந்த மாடல்?

மேலும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டாப் எண்ட் வேரியண்ட்டும் இருக்கிறது. கேமராவிலும் அல்ட்ரா பிரீமியம் காட்டி இருக்கிறது. பிரீமியம் விவோ போன்களில் கிடைக்கும் ஜீஸ் ஆப்டிக்ஸ் (ZEISS Optics) கிடைக்கிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா (ஓஐஎஸ் டெக்னாலஜி + சோனி ஐஎம்எக்ஸ்921 சென்சார்) வருகிறது.

சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சாருடன் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. சோனி ஐஎம்எஸ்882 சென்சாருடன் (Sony IMX882) 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வருகிறது. 15எம்எம் போகல் லென்த் மற்றும் 3X ஆப்டிகல் ஜூமிங் கிடைக்கிறது. 20 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. 6000mAh பேட்டரி மற்றும் 80W சார்ஜிங் உள்ளது.

40W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பேட்டரி இருக்கும் அன்-போல்டு செய்யும்போது வெறும் 4.3 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. அதேபோல போல்டு செய்தால் 9.2 எம்எம் தடிமன் இருக்கிறது. IP5X ரேட்டிங், IPX8 ரேட்டிங், IPX9 ரேட்டிங் & IPX9+ ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

கிரீன் பைன், ஒயிட் மற்றும் டைட்டானியம் கலர்களில் கிடைக்க இருக்கிறது. 12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.83,728ஆகவும், 12 ஜிபி + 512 ஜிபி மாடலின் விலை ரூ.95,747ஆகவும், 16 ஜிபி + 512 ஜிபி மாடலின் விலை ரூ.1,01,758ஆகவும் உள்ளது. 16 ஜிபி + 1 டிபி மாடலின் விலை ரூ.1,13,694ஆக இருக்கிறது. ஜூலை 2ஆம் தேதி முதல் சீனாவில் விற்பனை தொடங்குகிறது.

Best Mobiles in India

English summary
Vivo X Fold5 With 12GB RAM 50MP Camera Launched in China Sale From July 2 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X