ஜூலை 14 உறுதி.. 6000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. இந்தியாவுக்கு வரும் புது Vivo போன்..
விவோ எக்ஸ் போல்டு 5 (Vivo X Fold 5) போன் ஆனது வரும் ஜூலை 14-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இதே தேதியில் விவோ எக்ஸ்200 எப்இ (Vivo X200 FE) மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த இரண்டு போன்களும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும்.
அதேபோல் விவோ எக்ஸ் போல்டு 5 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் சிப்செட், ஐபி69 ரேட்டிங், 80W சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. இப்போது ஆன்லைனில வெளியான விவோ எக்ஸ் போல்டு 5 போனின் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ எக்ஸ் போல்டு 5 அம்சங்கள் (Vivo X Fold 5 Specifications): விவோ எக்ஸ் போல்டு 5 போன் 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. மேலும் 15எம்எம் போகல் லென்த், 3X ஆப்டிகல் ஜூமிங், ஜீஸ் ஆப்டிக்ஸ் (ZEISS Optics) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. டூயல் 5ஜி, புளூடூத் வி5.4, வைஃபை 7, ஜிபிஎஸ், ஐஆர் பிளாஸ்டர், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) போனில் உள்ளது.
குறிப்பாக 8.03-இன்ச் இன்னர் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த மெயின் டிஸ்பிளேவில் 2480 x 2200 பிக்சல்கள், யூடிஜி கிளாஸ் (UTG Glass) புரொடெக்சன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2K ரெசல்யூஷன், எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+), டால்பி விஷன் (Dolby Vision) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
6.53 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கவர் அமோலெட் டிஸ்பிளே வசதியும் இந்த போனில் உள்ளது. இந்த டிஸ்பிளேவில் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2748 x 1172 பிக்சல்கள், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன.

சக்திவாய்ந்த 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (4nm Octa Core Snapdragon 8 Gen 3) சிப்செட் விவோ எக்ஸ் போல்டு 5 மாடலில் உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓர்ஜின்ஓஎஸ் 5 (OriginOS 5) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் விவோ எக்ஸ் போல்டு 5 இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வசதியும் இந்த போனில் உள்ளது.
அதேபோல் 6000mAh பேட்டரி கொண்டுள்ளது விவோ எக்ஸ் போல்டு 5 மாடல். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W வயர்டு சார்ஜிங், 40W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. குறிப்பாக ஜூலை 14-ம் தேதி மதியம் 12 மணி அளவில் விவோ எக்ஸ் போல்டு 5 அறிமுகம் செய்யப்படும். இந்த போன் அறிமுகத்திற்குப் பிறகு பிளிப்கார்ட்டிலும், விவோ இந்தியா ஆன்லைன் ஸ்டோரிலும் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








