எல்லாரும் ஒத்து இனி Vivo தான் கெத்து- புக் மாதிரி மடிக்கலாம், பக்கா ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்!

|

Vivo X Fold இன் மேம்பட்ட பதிப்பாக Vivo X Fold S அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது TSMC ஆல் தயாரிக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 SoC மூலம் இயக்கப்படும் எனவும் 80W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 4,700mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Vivo X Fold S விரைவில் அறிமுகம்

Vivo X Fold S விரைவில் அறிமுகம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் விவோ தனது முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை எக்ஸ் ஃபோல்ட் என்ற பெயருடன் அறிமுகப்படுத்தியது.

தற்போது நிறுவனம் இந்த தொடரில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அதுதான் Vivo X Fold S ஆகும்.

ஸ்னாப்டிராகன் 8+ ஜென்1 எஸ்ஓசி ஆதரவு

ஸ்னாப்டிராகன் 8+ ஜென்1 எஸ்ஓசி ஆதரவு

டிப்ஸ்டர் டிஜிட்டல் தளத்தில் இந்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் Vivo X Fold S ஆனது TSMC ஆல் தயாரிக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8+ ஜென்1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிப்செட் தான் சமீபத்தில் வெளியாகும் பெரும்பாலான ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களில் பொருத்தப்பட்டிருக்கிறது.

Vivo X Fold இன் மேம்பட்ட பதிப்பாக இது இருக்கிறது. காரணம் Vivo X Fold ஆனது Snapdragon 8 Gen 1 SoC மூலம் இயக்கப்படுகிறது.

80W வயர்டு சார்ஜிங் ஆதரவு

80W வயர்டு சார்ஜிங் ஆதரவு

அதேபோல் முந்தைய எக்ஸ் ஃபோல்ட் ஸ்மார்ட்போனானது 4600 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 66வாட்ஸ் வயர்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருந்தது.

மேம்பட்ட ஸ்மார்ட்போன் பதிப்பான புதிய Vivo X Fold S ஆனது 80W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் 4,700mAh பேட்டரி இதில் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் கசிவுத் தகவல் தெரிவிக்கிறது.

அடுத்த மாதம் வெளியீடு

அடுத்த மாதம் வெளியீடு

ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே, ஸ்டோரேஜ், ரேம் மற்றும் கேமராக்கள் அனைத்தும் விவோ எக்ஸ் ஃபோல்டுக்கு ஒத்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

Vivo X Fold சிறப்பம்சங்கள்

Vivo X Fold சிறப்பம்சங்கள்

Vivo X Fold ஆனது 2K+ (1,916×2,160 பிக்சல்கள்) தீர்மானத்துடன் கூடிய 8.03-இன்ச் Samsung E5 இன்வர்ட் ஃபோல்டிங் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது.

120Hz ரெஃப்ரெஷிங் ரேட் ஆதரவுடன் கூடிய அல்ட்ரா-டச் கிளாஸ் (UTG) மூலம் பாதுகாக்கப்படுகிறது.

1,080×2,520 பிக்சல்கள் தீர்மானத்துடன் 120Hz ரெஃப்ரஷிங் ரேட் உடன் சாம்சங் E5 6.53 இன்ச் கவர் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

முந்தைய மாடல் அம்சங்கள்

முந்தைய மாடல் அம்சங்கள்

Vivo X Fold ஸ்மார்ட்போனானது octa-core Snapdragon 8 Gen 1 SoC மூலம் இயக்கப்படுகிறது. இது குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. முன்பக்கத்தில் 16 எம்பி செல்பி கேமரா சென்சார் இடம்பெற்றிருக்கிறது.

ஃபோல்ட் காட்சிக்கு மேல் ஒரு முன்புற கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 ஐ அடிப்படையாகக் கொண்ட OriginOS Ocean மூலம் இயக்கப்படுகிறது.

ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், 50 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 12 எம்பி 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் 48 எம்பி அல்ட்ரா வைட் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. எச்டிஆர் ஆதரவு கொண்ட 16 எம்பி செல்பி கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது.

12 ஜிபி ரேம் ஆதரவுடன் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ப்ளாக் மற்றும் ப்ளூ வண்ண விருப்பத்தில் வெளியானது.

ஃபோல்டபிள் பிரிவில் ஏற்படும் போட்டி

ஃபோல்டபிள் பிரிவில் ஏற்படும் போட்டி

சில தினங்களுக்கு முன்பு தான் சாம்சங் Galaxy Z Fold 4 சீரிஸ் மற்றும் Xiaomi Mix Fold 2 ஸ்மார்ட்போன்கள் வெளியானது. சாம்சங் Galaxy Z Fold 4 ஆனது ரூ.1,42,700 என்ற விலையில் அறிமுகமானது. அதேபோல் Xiaomi Mix Fold 2 ஆனது ரூ.1,06,300 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

தற்போது ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் பிரிவில் விவோ நிறுவனம் Vivo X Fold S ஸ்மார்ட்போனை விரைவில் களமிறக்க இருக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ விலை மற்றும் அம்சங்கள் வைத்து தான் ஃபோல்டபிள் பிரிவில் ஏற்படும் போட்டியை கணிக்க முடியும்.

Best Mobiles in India

English summary
vivo x fold S Might be launching soon with snapdragon 8+ Gen 1 SoC, 80W Fast Charging and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X