Home
Mobile

வெச்சான் பாரு விவோ.. 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. 16GB ரேம்..1TB மெமரி.. எந்த மாடல்?

விவோ நிறுவனத்தின் பிரீமியம் மாடலான விவோ எக்ஸ் போல்டு 6 (Vivo X Fold 6) ஸ்மார்ட்போனின் ரேம், மெமரி மற்றும் விலை விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. அல்ட்ரா பிரீமியம் விலை கொண்ட மாடலாக இருப்பது தெரிகிறது. இந்த விவோ எக்ஸ் போல்டு 6 ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

வருகிற ஜூன் 26ஆம் தேதியன்று சீன மார்கெட்டில் இந்த விவோ எக்ஸ் போல்டு 6 ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, முக்கிய பீச்சர்கள் கசிந்து, எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இப்போது, ரேம், மெமரி வேரியண்ட்களுடன் விலை விவரங்களும் கசிந்துள்ளன. விவோ எக்ஸ் போல்டு 5 மாடலை விட கூடுதல் விலைக்கு வெளியாக இருக்கிறது.

வெச்சான் பாரு விவோ.. 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே!

விவோ எக்ஸ் போல்டு 6 விலை (Vivo X Fold 6 Price): 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,39,826 ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,53,810 ஆகவும் இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,60,802 ஆக இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.1,74,786 ஆக இருக்கிறது.

விவோ எக்ஸ் போல்டு 5 ஸ்மார்ட்போனின் விலையை பார்த்தால், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.97,871 ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,11,854 ஆகவும் இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,18,846 ஆக இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,32,830 ஆக இருக்கிறது.

ஆகவே, ஆரம்ப விலையே 50 சதவீதத்துக்கும் மேல் இருக்கிறது. இதனால், பிரீமியம் பீச்சர்களை எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் ரூ.1 லட்சம் விலைக்குள் எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு இது அல்ட்ரா பிரீமியம் மாடலாக இருக்கும். இதுவரை டிஸ்பிளே, சிப்செட், பேட்டரி பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. இந்த பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

விவோ எக்ஸ் போல்டு 6 அம்சங்கள் (Vivo X Fold 6 Specifications): பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சூப்பர் எடிஷன் (Octa Core MediaTek Dimensity 9500 Super Edition) சிப்செட்டை இந்த விவோ எக்ஸ் போல்டு 6 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 8.02 இன்ச் போல்டபிள் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை கொடுக்க இருக்கிறது.

இது மெயின் டிஸ்பிளேவாக இருக்கிறது. அவுட்டர் டிஸ்பிளேவின் அளவு தெரியவில்லை. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கிடைக்கிறது. போல்டு மாடல்களுக்கான பிரத்யேக பீச்சர்களுடன் யுஐ கிடைக்க இருக்கிறது. ஆகவே, போல்டு மாடல்களில் மட்டுமே கிடைக்கும் அப்கிரேட்களை இதில் எதிர்பார்க்கலாம்.

பெரிய டிஸ்பிளேவை கொடுக்க இருப்பதால், 7000mAh பேட்டரி கொண்ட மாடலாக இந்த விவோ எக்ஸ் போல்டு 6 வெளியாக இருக்கிறது. இருப்பினும், 6000mAh பேட்டரி கிடைக்கும் என்று முன்னதாக கசிந்த பீச்சர்கள் தெரிவிக்கின்றன. 200 எம்பி மெயின் கேமரா மற்றும் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்க இருக்கிறது. சைடுமவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் வருகிறது.

Best Mobiles in India

English summary
Vivo X Fold 6 With Dimensity 9500 Super Edition Price Specifications Leaked Ahead of June 26 Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X