Vivo அறிமுகம் செய்த புது 5ஜி போன்.. 200எம்பி கேமரா.. IPX9 ரேட்டிங்.. எந்த மாடல்? என்ன விலை?
விவோ நிறுவனம் சீனாவில் விவோ எக்ஸ் போல்ட் 6 (Vivo X Fold 6) ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
விவோ எக்ஸ் போல்ட் 6 அம்சங்கள் (Vivo X Fold 6 Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சூப்பர் எடிஷன் (Dimensity 9500 Super Edition) சிப்செட் உடன் இந்த புதிய விவோ எக்ஸ் போல்ட் 6 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் Arm Mali-G1 Ultra MC12 GPU கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.

8.02-இன்ச் இன்னர் டிஸ்பிளே (inner display) வசதியைக் கொண்டுள்ளது புதிய விவோ எக்ஸ் போல்ட் 6 மாடல். இந்த மெயின் டிஸ்பிளேவில் 5000 நிட்ஸ் பிரைட்னஸ், டால்பி விஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), எச்டிஆர் 10 பிளஸ், UTG கிளாஷ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
அதேபோல் 6.51-இன்ச் கவர் டிஸ்பிளேவும் இதில் உள்ளது. இந்த டிஸ்பிளேவில் 5000 நிட்ஸ் பிரைட்னஸ், டால்பி விஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.
200எம்பி மெயின் கேமரா மற்றும் 50எம்பி டெலிபோட்டோ கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த விவோ போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய விவோ போனில் உள்ளன.
விவோ எக்ஸ் போல்ட் 6 மாடல் OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும். இதுதவிர பாதுகாப்பு அப்டேட்களும் இந்த விவோ போனுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
7000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது புதிய விவோ எக்ஸ் போல்ட் 6 மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதுதவிர 40W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளன.
இந்த சாதனத்தில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) வசதி உள்ளது. மேலும் IP5X/IPX8/IPX9 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் விவோ எக்ஸ் போல்ட் 6 மாடல் வெளிவந்துள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 7, ஜிபிஎஸ், பெய்டோ (BeiDou), குளோனாஸ் (GLONASS, கலிலியோ (Galileo), யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ எக்ஸ் போல்ட் 6 போனில் உள்ளன. அதேபோல் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வசதிகளும் இந்த போனில் உள்ளன.
விவோ எக்ஸ் போல்ட் 6 விலை:
- 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ் போல்ட் 6 விலை 7999 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,10,990)
- 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ் போல்ட் 6 விலை 8999 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,24,850)
- 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ் போல்ட் 6 விலை 9999 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,38,720)
- 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ் போல்ட் 6 விலை 10999 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,52,595)
- 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ் போல்ட் 6 (Bluehole Professional Imaging Kit) விலை 11999 yuan(இந்திய மதிப்பில் ரூ.1,66,485)
- 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ் போல்ட் 6 (Black Gold Professional Imaging Kit) விலை 12299 yuan(இந்திய மதிப்பில் ரூ.1,70,650)
வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் சீனாவில் இந்த விவோ போன் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications