VIVO-வின் புது வேட்டையன்.. 7000mAh பேட்டரி, 200MP 8K கேமரா, 16GB ரேம், IP59 உடன் புது போன்.. எந்த மாடல்?
7000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி உடன்.. அதாவது, இதுவரை வெளியான எந்த போல்டபிள் ஸ்மார்ட்போன்களிலும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பேட்டரி உடன் அறிமுகமான.. விவோ (Vivo) நிறுவனத்தின் லேட்டஸ்ட் போல்டபிள் ஸ்மார்ட்போன் (Foldable smartphone) ஆன விவோ எக்ஸ் போல்ட் 6 (Vivo X Fold 6) மாடலின் இந்திய அறிமுகம் மற்றும் விலை குறித்த தகவல் கிடைத்துள்ளது.
புக்-ஸ்டைல் (book-style) டிஸைனுடன் வரும் இந்த விவோ போல்ட் ஸ்மார்ட்போன் ஆனது வருகிற அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும், இதனுடன் எக்ஸ்-சீரீஸை சேர்ந்த மற்றொரு விவோ ஸ்மார்ட்போனும் அறிமுகமாகலாம் என்றும் டிப்ஸ்டர் சஞ்சு சவுத்ரி (Sanju Choudhary) தெரிவித்து உள்ளார். இந்த ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தை விவோ இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகமானதை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் உண்மையாக இருந்தால், விவோ எக்ஸ் போல்ட் 6 ப்ரோ (Vivo X Fold 3 Pro) மற்றும் கடந்த ஆண்டு வெளியான விவோ எக்ஸ் போல்ட் 5 (Vivo X Fold 5) ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்தியாவில் அறிமுகமாகும் விவோவின் மூன்றாவது போல்டபிள் போனாக விவோ எக்ஸ் 6 போல்ட் இருக்கும்.
என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? லான்ச் டைம்லைன் உடன் சேர்த்து, மேற்குறிப்பிட்ட டிப்ஸ்டர், விவோ எக்ஸ் போல்ட் 6 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ.1.5 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்றும் கணித்துள்ளார். குறிப்பிடத்தக்க வண்ணம் இது மோட்டோரோலா ரேஸர் போல்ட் (Motorola Razr Fold) மாடலின் விலைக்கு இணையானது. அதே சமயம் சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 7 (Samsung Galaxy Z Fold 7) மாடலை விட குறைவாகும்.
சீனாவில் விவோ எக்ஸ் 6 போல்ட் ஸ்மார்ட்போன் ஆனது சுமார் ரூ.1.11 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஹை-எண்ட் மாடலான 16GB + 1TB பிளாக் கோல்ட் எடிஷனின் விலை சுமார் ரூ.1.57 லட்சம் ஆகும். வரிகள் மற்றும் இறக்குமதி கட்டணங்கள் காரணமாக இந்தியாவில் இதன் விலை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ரூ.1.5 லட்சத்திற்கு மேல் விலை இருக்கும் என்ற தகவலுடன் ஒத்துப்போகிறது.
விவோ எக்ஸ் 6 போல்ட் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- Android 16-ஐ அடிப்படையாகக் கொண்ட OriginOS 6 Fold ஓஎஸ்
- டூயல் சிம் (dual SIM) வசதி
- 8.02-இன்ச் (2,504 x 2,312 பிக்சல்ஸ்) போல்டபிள் AMOLED டிஸ்பிளே
- 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- 6.51-இன்ச் (1,120 x 2,528 பிக்சல்ஸ்) AMOLED அவுட்டர் டிஸ்பிளே
- தூசி மற்றும் நீர் புகாத்தன்மைக்கான IP58 மற்றும் IP59 ரேட்டிங்
- 3nm ஆக்டா-கோர் MediaTek Dimensity 9500 Super சிப்செட்
- 16GB வரையிலான LPDDR5x அல்ட்ரா ரேம்
- 1TB வரையிலான UFS 4.1 ஸ்டோரேஜ்
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- ஃபேஸ் அன்லாக் (face unlock) வசதி
- Zeiss தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) வசதியுடன் கூடிய 200 மெகாபிக்சல் (f/1.68) ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் (f/2.05) அல்ட்ரா-வைட் கேமரா
- 100x வரை டிஜிட்டல் ஜூம் வசதி கொண்ட 50 மெகாபிக்சல் (f/2.57) பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- இன்னர் மற்றும் அவுட்டர் ஸ்க்ரீனில் தலா ஒரு 20 மெகாபிக்சல் (f/2.4) செல்பீ கேமரா
- 8K தரத்திலான வீடியோக்களைப் பதிவு செய்யும் திறன்
- 7,000mAh பேட்டரி
- 80W வயர்டு (wired) மற்றும் 40W வயர்லெஸ் (wireless) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
- எடை சுமார் 228 கிராம்


Click it and Unblock the Notifications