VIVO நீ தான் வொர்த்து.. ஸ்லிம், லைட் வெயிட் டிசைனில் 7000mAh பேட்டரி + 200MP கேமரா காம்பினேஷனில் புது போன்!
விவோ (Vivo) நிறுவனமானது 7000mAh பேட்டரி + 200எம்பி ட்ரிபிள் கேமராக்கள் + டிமென்சிட்டி 9500 சிப்செட் என்கிற காம்பினேஷனில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை, இந்த 2026 ஜூன் மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. அது விவோ எக்ஸ் ஃபோல்ட் 6 போல்டபிள் ஸ்மார்ட்போன் (Vivo X Fold 6 foldable phone) ஆகும்.
விவோ எக்ஸ் ஃபோல்ட் 6 போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஜூன் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Tipster Digital Chat Station) வழியாக இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.

விவோ எக்ஸ் ஃபோல்ட் 6 போல்டபிள் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? மேற்குறிப்பிட்ட டிப்ஸ்டரின் கூற்றுப்படி, விவோ எக்ஸ் ஃபோல்ட் 6 ஆனது மீடியாடெக்கின் டைமென்சிட்டி 9500 பிளாக்ஷிப் சிப்செட் மூலம் இயக்கப்படும். சுவாரசியமாக இந்த போல்டபிள் ஸ்மார்ட்போனில் 7,000mAh திறன் கொண்ட ஒரு பெரிய பேட்டரி இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.
இது உண்மையாகும் பட்சத்தில், ஒரு போல்டபிள் ஸ்மார்ட்போனில் காணப்படும் மிகப்பெரிய பேட்டரிகளில் இதுவும் ஒன்றாக இருக்கும். கேமராக்களை பொறுத்தவரை, விவோ எக்ஸ் ஃபோல்ட் 6 ஸ்மார்ட்போனில் 200 மெகாபிக்சல் பெரிய சென்சார் கொண்ட ப்ரைமரி கேமராவும், அதனுடன் நடுத்தர அளவு சென்சார் கொண்ட 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவும் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக வெளியான லீக் ஒன்றில், இதன் ரியர் கேமரா அமைப்பில் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்து இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. இப்படி பெரிய பேட்டரி மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா ஹார்ட்வேர் இருக்கும் போதிலும், இந்த ஸ்மார்ட்போன் ஸ்லிம் ஆன மற்றும் எடை குறைந்த வடிவமைப்பை தக்க வைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பிற்காக, இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சீன சந்தையில், இது ஹானர் மேஜிக் வி6, ஒப்போ ஃபைண்ட் என்6 மற்றும் வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 8 போன்றவற்றுடன் கடுமையாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 8 எப்போது அறிமுகமாகும்? தொழில்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி, சியோல் எகனாமிக் டெய்லி (Seoul Economic Daily) ஆனது, சாம்சங் நிறுவனம் தனது அடுத்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை வருகிற ஜூலை 22 ஆம் தேதி அன்று லண்டனில் நடத்தும் என்று தெரிவிக்கிறது.
ஜூன் 22 இல் என்னென்ன சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம்? இந்த நிகழ்வின் போது, சாம்சங் நிறுவனம், கேலக்ஸி வாட்ச் 9 சீரீஸ் (Galaxy Watch 9 series) உடன் கேலக்ஸி இஸட் ஃபோல்டு 8 (Galaxy Z Fold 8) மற்றும் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 8 (Galaxy Z Flip 8) ஸ்மார்ட்போன்களையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கேலக்ஸி ஃபோல்ட் வைட்: சாம்சங் நிறுவனம் தனது நெக்ஸ்ட் ஜெனரேஷன் போல்டபிள் சீரிஸில் ஒரு புதிய மாடலை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் நம்பப்படுகிறது, இதற்கு தற்காலிகமாக "ஃபோல்ட் வைட்" (Fold Wide) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள போல்டபிள் போன்களை விட அகலமான கிடைமட்ட வடிவமைப்பை கொண்டிருக்கக்கூடும். விரிக்கப்பட்ட நிலையில், இது டேப்லெட் போன்ற தோற்ற விகிதத்தை வழங்கவும் வாய்ப்புள்ளது.
ஆப்பிளின் முதல் போல்டபிள் ஐபோனின் மாடலும் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது: இது ஐபோன் அல்ட்ரா (iPhone Ultra) என்கிற பெயரின் கீழ் மார்க்கெட்டிங் செய்யப்பட்டு, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் சீரிஸில் மிகவும் பிரீமியம் மாடலாக (அதாவது விலை உயர்ந்த மாடலாக) நிலைநிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications