களமிறங்கியது புது விவோ 5ஜி போன்.. 200எம்பி கேமரா.. 6900எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?
விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ எக்ஸ் போல்ட் 6 (Vivo X Fold 6) ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. தரமான அம்சங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் இந்த புதிய விவோ போல்ட் போன் வெளியாகி உள்ளது. இப்போது விவோ எக்ஸ் போல்ட் 6 போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
விவோ எக்ஸ் போல்ட் 6 அம்சங்கள் (Vivo X Fold 6 Specifications): 8.02-இன்ச் 2கே பிளஸ் AMOLED LTPO இன்னர் டிஸ்பிளே (inner display) வசதியைக் கொண்டுள்ளது புதிய விவோ எக்ஸ் போல்ட் 6 மாடல். இந்த மெயின் டிஸ்பிளேவில் 5000 நிட்ஸ் பிரைட்னஸ், டால்பி விஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), எச்டிஆர் 10 பிளஸ், UTG கிளாஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

6.51-இன்ச் கவர் டிஸ்பிளேவும் இதில் உள்ளது. இந்த டிஸ்பிளேவில் 5000 நிட்ஸ் பிரைட்னஸ், டால்பி விஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.
மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சூப்பர் எடிஷன் (Dimensity 9500 Super Edition) சிப்செட் உடன் இந்த புதிய விவோ எக்ஸ் போல்ட் 6 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் ஆர்ம் மாலி ஜி1 அல்ட்ரா எம்சி12 ஜிபியு (Arm Mali G1 Ultra MC12 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.
200எம்பி Samsung HPB மெயின் கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த விவோ போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய விவோ போனில் உள்ளன.
விவோ எக்ஸ் போல்ட் 6 மாடல் OriginOS 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 17 இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும். இதுதவிர பாதுகாப்பு அப்டேட்களும் இந்த விவோ போனுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
6900எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது புதிய விவோ எக்ஸ் போல்ட் 6 மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதுதவிர 40W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளன.
இந்த சாதனத்தில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) வசதி உள்ளது. மேலும் IP5X/IPX8/IPX9 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் விவோ எக்ஸ் போல்ட் 6 மாடல் வெளிவந்துள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 7, ஜிபிஎஸ், பெய்டோ (BeiDou), குளோனாஸ் (GLONASS, கலிலியோ (Galileo), யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ எக்ஸ் போல்ட் 6 போனில் உள்ளன. அதேபோல் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வசதிகளும் இந்த போனில் உள்ளன.
12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ் போல்ட் 6 மாடலின் விலை ரூ.2,19,999-ஆக உள்ளது. விவோ இந்தியா இ-ஸ்டோர், அமேசான, பிளிப்கார்ட் தளங்களில் வரும் அக்டோபர் 13-ம் தேதி இந்த புதிய விவோ போன் விற்பனைக்கு வரும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். நெபுலா டீல் மற்றும் பிரிசம் பிளாக் ஆகிய கல்களில் இந்த போனை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications
