Home
Mobile

Vivo களமிறக்கும் புதிய 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. 200எம்பி கேமரா.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் விரைவில் விவோ எக்ஸ் போல்டு 6 போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் வாரங்களில் இந்த விவோ போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த விவோ ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

விவோ எக்ஸ் போல்டு 6 அம்சங்கள் (Vivo X Fold 6 Specifications): 8.02-இன்ச் இன்னர் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த மெயின் டிஸ்பிளேவில் 2480 x 2200 பிக்சல்கள்,யூடிஜி கிளாஸ் (UTG Glass) புரொடெக்சன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+), டால்பி விஷன் (Dolby Vision) உள்ளிட்ட பல அம்சங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Vivo களமிறக்கும் புதிய 5ஜி போன்.. 7000mAh பேட்டரி..எந்த மாடல்?

6.51 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கவர் அமோலெட் டிஸ்பிளே வசதியும் இந்த போனில் உள்ளது. இந்த டிஸ்பிளேவில் 4600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2748 x 1172 பிக்சல்கள், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

விவோ எக்ஸ் போல்டு 6 போன் 200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. மேலும் 16எம்எம் போகல் லென்த், 3X ஆப்டிகல் ஜூமிங், ஜீஸ் ஆப்டிக்ஸ் (ZEISS Optics) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. டூயல் 5ஜி, புளூடூத், வைஃபை 7, ஜிபிஎஸ், ஐ ஆர் பிளாஸ்டர், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் விவோ எக்ஸ் போல்டு 6 உள்ளன. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) இந்த போனில் உள்ளது.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9500 எஸ்ஒசி (MediaTek Dimensity 9500 SoC) சிப்செட் விவோ எக்ஸ் போல்டு 6 மாடலில் உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். தரமான கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vivo களமிறக்கும் புதிய 5ஜி போன்.. 7000mAh பேட்டரி..எந்த மாடல்?

ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) வசதியுடன் விவோ எக்ஸ் போல்டு 6 போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வசதியும் இந்த போனில் உள்ளது.

7000mAh பேட்டரி கொண்டுள்ளது விவோ எக்ஸ் போல்டு 6 மாடல். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய விவோ போன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo X Fold 6 specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X