Samsung, Apple-ஐ விரட்டி விட்ட VIVO.. 6900mAh பேட்டரி, 200MP கேமராவுடன் புது போன்.. எந்த மாடல்?
விவோ (Vivo) நிறுவனம் இம்மாதம் - பிரம்மாண்டமான 6900mAh பேட்டரி கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. "ப்ரோ.. 7000mAh பேட்டரிலாம் இப்போ சாதாரணமா ஆகிடுச்சே.. இதுக்கு ஏன் இவ்ளோ பில்ட்-அப்?" என்று உங்களில் சிலர் கேட்கலாம். காரணம் இருக்கிறது!
இது வெறுமனே ஒரு பிக் பேட்டரி போன் மட்டுமல்ல. இது 6900mAh பேட்டரி கொண்ட போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆகும். அது விவோ எக்ஸ் ஃபோல்ட் 6 (Vivo X Fold 6) போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆகும்,. இது இம்மாதத்திற்குள் (ஜூன் 2026) சீனாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 8 மற்றும் புதிய கேலக்ஸி ஃபோல்ட் வைட் ஆகிய இரண்டு மாடல்களும் இந்த போனிற்கு கடும் பொடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் வெளியீடு மிகவும் நெருக்கமாக உள்ளதை குறிக்கும் படியாக, டிப்ஸ்டர் எக்ஸ்பீரியன்ஸ் மோர் வழியாக இந்த ஸ்மார்ட்போனின் மற்ற முக்கிய அம்சங்கள் லீக் ஆகியுள்ளது. குறிப்பிட்ட டிப்ஸ்டர், இந்த ஸ்மார்ட்போன் டூயல்-செல் பேட்டரி உடன் வரும் என்பதையும், அது 2,807mAh + 3,863mAh கெப்பாசிட்டியை கொண்டிருக்கும் என்பதையும், இது 6670mAh ஒருங்கிணைந்த மதிப்பிடப்பட்ட மதிப்பை வழங்கும் என்பதையும் வெளிப்படுத்துகிறது. எனவே, இதன் வழக்கமான திறன் 6,900mAh ஆக இருக்க வாய்ப்புள்ளது.
மற்ற அம்சங்களை பொறுத்தவரை விவோ எக்ஸ் ஃபோல்ட் 6 ஸ்மார்ட்போன் ஆனது, தற்போது மீடியாடெக்கின் மிகவும் சக்திவாய்ந்த சிப்செட்டான டைமென்சிட்டி 9500 உடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இது 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். இதெல்லாம் வட்ட வடிவிலான கேமரா மாட்யூலுக்குள் இருக்கும்
பாதுகாப்பிற்காக, விவோ எக்ஸ் ஃபோல்ட் 6 ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் இடம்பெறலாம். மேலும் இது உயர் மட்ட நீர் எதிர்ப்பு திறனை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் சரியான ஐபி ரேட்டிங் குறித்த விவரங்கள் இல்லை.
நினைவூட்டும் வண்ணம், கடந்த ஆண்டு அறிமுகமான விவோ எக்ஸ் போல்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப் கொண்டு இயங்குகிறது. இது 6,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. கேமராக்களை பொறுத்தவரை இது ட்ரிபிள் 50 மெகாபிக்சல் கேமராக்களை கொண்டுள்ளது மற்றும் IP58 / IP59 தரமதிப்பீடு பெற்ற தூசி மற்றும் நீர் எதிர்ப்புத் திறனையும் கொண்டிருந்தது.
ஆப்பிளின் முதல் போல்டபிள் ஐபோனின் மாடலும் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது: இது ஐபோன் அல்ட்ரா (iPhone Ultra) என்கிற பெயரின் கீழ் மார்க்கெட்டிங் செய்யப்பட்டு, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் சீரிஸில் மிகவும் பிரீமியம் மாடலாக (அதாவது விலை உயர்ந்த மாடலாக) நிலைநிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 8 எப்போது அறிமுகமாகும்? தொழில்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி, சியோல் எகனாமிக் டெய்லி (Seoul Economic Daily) ஆனது, சாம்சங் நிறுவனம் தனது அடுத்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை வருகிற ஜூலை 22 ஆம் தேதி அன்று லண்டனில் நடத்தும் என்று தெரிவிக்கிறது. ஜூன் 22 இல் என்னென்ன சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம்? இந்த நிகழ்வின் போது, சாம்சங் நிறுவனம், கேலக்ஸி வாட்ச் 9 சீரீஸ் (Galaxy Watch 9 series) உடன் கேலக்ஸி இஸட் ஃபோல்டு 8 (Galaxy Z Fold 8) மற்றும் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 8 (Galaxy Z Flip 8) ஸ்மார்ட்போன்களையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கேலக்ஸி ஃபோல்ட் வைட்: சாம்சங் நிறுவனம் தனது நெக்ஸ்ட் ஜெனரேஷன் போல்டபிள் சீரிஸில் ஒரு புதிய மாடலை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் நம்பப்படுகிறது, இதற்கு தற்காலிகமாக "ஃபோல்ட் வைட்" (Fold Wide) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள போல்டபிள் போன்களை விட அகலமான கிடைமட்ட வடிவமைப்பை கொண்டிருக்கக்கூடும். விரிக்கப்பட்ட நிலையில், இது டேப்லெட் போன்ற தோற்ற விகிதத்தை வழங்கவும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications