Home
Mobile

நாடே எதிர்பார்த்த விவோ 5ஜி போன் வருகிறது.. 7000mAh பேட்டரி.. 200MP கேமரா.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் கடந்த ஜூன் மாதம் சீனாவில் விவோ எக்ஸ் போல்ட் 6 (Vivo X Fold 6) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. தரமான அம்சங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் இந்த போன் வெளியானது. இந்நிலையில் விவோ எக்ஸ் போல்ட் 6 மாடலை இந்தியா மற்றும் உலக நாடுகளில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது விவோ.

தற்போது விவோ எக்ஸ் போல்ட் 6 போனின் இந்திய அறிமுக தேதி ஆன்லைனில் கசிந்துள்ளது. அதாவது டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் (Abhishek Yadav) வெளியிட்ட தகவலின்படி, விவோ எக்ஸ் போல்ட் 6 போன் அக்டோபர் 1-ம் தேதி உலகளவில் வெளியிடப்படும் என்றும், அதை தொடர்ந்து அக்டோபர் 6-ம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

நாடே எதிர்பார்த்த விவோ 5ஜி போன் வருகிறது.. எந்த மாடல்?

குறிப்பாக இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது விவோ எக்ஸ் போல்ட் 6 ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

விவோ எக்ஸ் போல்ட் 6 அம்சங்கள் (Vivo X Fold 6 Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சூப்பர் எடிஷன் (Dimensity 9500 Super Edition) சிப்செட் கொண்டுள்ளது விவோ எக்ஸ் போல்ட் 6. மேலும் Arm Mali-G1 Ultra MC12 GPU கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.

8.02-இன்ச் இன்னர் டிஸ்பிளே (inner display) வசதியைக் கொண்டுள்ளது புதிய விவோ எக்ஸ் போல்ட் 6 மாடல். இந்த மெயின் டிஸ்பிளேவில் 5000 நிட்ஸ் பிரைட்னஸ், டால்பி விஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), எச்டிஆர் 10 பிளஸ், UTG கிளாஷ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

6.51-இன்ச் கவர் டிஸ்பிளேவும் இதில் உள்ளது. இந்த டிஸ்பிளேவில் 5000 நிட்ஸ் பிரைட்னஸ், டால்பி விஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

200எம்பி மெயின் கேமரா மற்றும் 50எம்பி டெலிபோட்டோ கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த விவோ போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய விவோ போனில் உள்ளன.

விவோ எக்ஸ் போல்ட் 6 மாடல் OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 மூலம் இயங்கும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும். இதுதவிர பாதுகாப்பு அப்டேட்களும் இந்த விவோ போனுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

7000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது புதிய விவோ எக்ஸ் போல்ட் 6 மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதுதவிர 40W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளன.

இந்த சாதனத்தில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) வசதி உள்ளது. மேலும் IP5X/IPX8/IPX9 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) இந்த மாடலில் உள்ளது.

நாடே எதிர்பார்த்த விவோ 5ஜி போன் வருகிறது.. எந்த மாடல்?

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 7, ஜிபிஎஸ், பெய்டோ (BeiDou), குளோனாஸ் (GLONASS, கலிலியோ (Galileo), யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ எக்ஸ் போல்ட் 6 போனில் உள்ளன. அதேபோல் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வசதிகளும் இந்த போனில் உள்ளன.

சீனாவில் விவோ எக்ஸ் போல்ட் 6 மாடலின் ஆரம்ப விலை 7999 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,10,990)-ஆக உள்ளது. இந்தியாவிலும் விவோ எக்ஸ் போல்ட் 6 போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo X Fold 6 India launch date leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X