Home
Mobile

Vivo களமிறக்கும் புதிய 5ஜி போன்.. 200எம்பி கேமரா.. 7000mAh பேட்டரி.. Dimensity சிப்செட்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் விரைவில் விவோ எக்ஸ் போல்ட் 6 (Vivo X Fold 6) போனை அறிமுகம் செய்ய உள்ளது. மற்ற போன்களை விட தரமான அம்சங்களுடன் இந்த புதிய விவோ போன் வெளியாகும். இந்நிலையில் விவோ எக்ஸ் போல்ட் 6 போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன.

விவோ எக்ஸ் போல்ட் 6 அம்சங்கள் (Vivo X Fold 6 Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சூப்பர் எடிஷன் (Dimensity 9500 Super Edition) சிப்செட் உடன் இந்த புதிய விவோ எக்ஸ் போல்ட் 6 மாடல் அறிமுகமாகும். எனவே இந்த போனில் வீடியோ எட்டிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

Vivo களமிறக்கும் புதிய 5ஜி போன்.. 200எம்பி கேமரா.. எந்த மாடல்?

OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் விவோ எக்ஸ் போல்ட் 6 மாடல் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு 4 அல்லது 5 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும். இதுதவிர பாதுகாப்பு அப்டேட்களும் இந்த விவோ போனுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

8.02-இன்ச் இன்னர் டிஸ்பிளே (inner display) வசதியைக் கொண்டுள்ளது புதிய விவோ எக்ஸ் போல்ட் 6 மாடல். அதேபோல் 6.53-இன்ச் கவர் டிஸ்பிளேவும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் பெரிய டிஸ்பிளே வசதி உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

இந்த விவோ எக்ஸ் போல்ட் 6 மாடலின் பின்புறம் 200எம்பி மெயின் கேமரா மற்றும் 50எம்பி டெலிபோட்டோ கேமரா உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய போனில உள்ளன.

7000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது புதிய விவோ எக்ஸ் போல்ட் 6 மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

Vivo களமிறக்கும் புதிய 5ஜி போன்.. 200எம்பி கேமரா.. எந்த மாடல்?

16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் விவோ எக்ஸ் போல்ட் 6 போன் அறிமுகமாகும். மேலும் இந்த சாதனத்தில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) வசதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் விவோ எக்ஸ் போல்ட் 6 மாடல் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இந்த போனில் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ எக்ஸ் போல்ட் 6 போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ எக்ஸ் போல்ட் 6 போன் சற்று உயர்வான விலையில் வெளிவரும்.

Image Credit: Weibo/ @Digital Chat Station

Best Mobiles in India

English summary
Vivo X Fold 6 images and specifications leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X